பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் புதிய சலுகைகள் எவ்வித தினசரி கட்டுப்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ரூ.39 விலையில் புதிய சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் ரூ.39 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித தினசரி கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. புதிய சலுகையில் பத்து நாட்கள் வேலிடிட்டி கொண்டிருப்பதோடு இந்தியா முழுக்க அனைத்து பி.எஸ்.என்.எல். வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மட்டுமின்றி, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங்-பேக் டோன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. எனினும் மற்ற பி.எஸ்.என்.எல். சலுகைகளை போன்றே இலவச வாய்ஸ் கால் சேவை மும்பை மற்றும் டெல்லி போன்ற வட்டாரங்களில் பொருந்தாது.ரூ.99 விலையில் கிடைக்கும் பி.எஸ்.என்.எல். சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங்-பேக் டோன் 26 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.319 சலுகையில் இதே சலுகைகள் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இரண்டு சலுகைகளிலும் எஸ்.எம்.எஸ். வசதி வழங்கப்படவில்லை.