Thursday , 20 September 2018
Home » இந்தியா » ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி – கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி – கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

1527189780-Kumaraswamy-BCCL2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், மதுபானம், மின்சாரம் மீதான வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 488 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.106 கோடி உபரி பட்ஜெட் ஆகும்.கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். கடனை சரியாக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு மொத்த கடனில் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com