ராமேஸ்வரம் அருகே கழிவறை செப்டிக் டேங்குக்கான பள்ளம் தோண்டியபோது பெட்டி, பெட்டியாக வெடிகுண்டுகள், தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த இடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் பயிற்சி மேற்கொண்ட இடம் என்று கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அடுத்த அந்தோணியார்புரம் கடற்கரை அருகே வசித்து வரும் எடிசன் என்பவரது வீட்டில் கழிவறை செப்டிக் டேங்குக்கான பள்ளம் தோண்ட முயற்சித்துள்ளனர். அப்போது பள்ளத்தில் சிறு, சிறு பெட்டிகள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒரு பெட்டியை பரிசோதித்தபோது, துப்பாக்கித் தோட்டாக்கள் தென்பட்டதால், உடனடியாக தங்கச்சிமடம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தோண்டியதில், பெட்டி, பெட்டியாக வெடிகுண்டுகள், ராக்கெட் லான்ச்சர்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள அந்த இடம் 1983 – 1984 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஆயுதப் பயிற்சிகள் நடத்திய இடம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Home » மாவட்டம் » இராமநாதபுரம் » ராமேஸ்வரம் அருகே பெட்டி பெட்டியாகராமேஸ்வரம் அருகே பெட்டி பெட்டியாக வெடிகுண்டுகள், தோட்டாக்கள்.. காவல்துறை தீவிர விசாரணை!!