Sunday , 16 December 2018
Home » இந்தியா » ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு!!

ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு!!

1தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தெலுங்கானா சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டு டிசம்பர் 7ம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முயன்று வருகிறது. காங்கிரசும், தெலுங்கு தேசமும் ஓரணியாக இத்தேர்தலை சந்திக்கின்றன. பிரதமர் மோடி இரண்டு கட்டங்களாக அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராகுல், சந்திரபாபு நாயுடு இணைந்து பிரச்சாரக் கூட்டத்தில் வாக்கு சேகரித்தனர்.ராஜஸ்தானில் தற்போது வசுந்தராராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ராஜஸ்தானில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளதால், பாஜக அரசு ஆட்சியைத் தக்கவைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com