Friday , 16 November 2018
Home » இந்தியா » ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டம்!!

ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டம்!!

4இலங்கை பிரதமராக அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி வகித்து வந்த நிலையில் அதிபர் மைத்ரி பால சிறிசேனா திடீரென ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ராஜபக்சே பிரதமராக நீடிக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலையில் வரும் 14-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று அறிவித்துள்ள அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. இது தொடர்பாக அதிபர் சிறிசேனா உள்ளிட்டோர் அந்தக் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவில்லை என்ற நிலையில் மாற்றம் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com