
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 4 நாட்களாக உயர்த்தப்பட்ட தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,288 உயர்ந்தது. அமெரிக்க, ஈரான் இடையே போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர்.
இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தையிலும் ஆபரண தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.512 அதிகரித்து ரூ.31,168க்கு விற்கப்பட்டது.இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ. 30,744-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ஒன்று ரூ.53 குறைந்து ரூ.3,843-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1.20 குறைந்து ரூ.51-க்கு விற்பனை செய்யப்படுகிறது.