Tuesday , 19 March 2019
Home » தமிழ்நாடு » ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது மு.க.ஸ்டாலினின் விருப்பம்-எடப்பாடி பழனிசாமி கருத்து

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது மு.க.ஸ்டாலினின் விருப்பம்-எடப்பாடி பழனிசாமி கருத்து

bகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது என்பது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் விருப்பம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கருணாநிதி சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டுள்ளது அவர்களுடைய விருப்பம் என்று தெரிவித்தார். தேர்தல் அறிவித்த பின்னர் யார், யார் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவரும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு, ஆயிரத்து 532 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com