Tuesday , 22 January 2019
Home » சினிமா » ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து

ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து

4தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
ரஜினி பிறந்தநாளுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களின் மூலம் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com