Friday , 19 October 2018
Home » சினிமா » ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்

Rajinikanthரஜினி அடுத்து வெளியாக இருக்கும் 2.0 படத்தின் ரிலீசுக்கான முழு வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். படத்தின் இடைவெளி வரைக்கும் ரஜினிக்கு தான் முக்கியத்துவம். இடைவெளிக்கு 10 நிமிடங்கள் முன்புதான் வில்லன் அக்‌‌ஷய்குமார் படத்தில் தோன்றுகிறார். அதில் இருந்து ஒட்டுமொத்த படமும் அக்‌‌ஷய்குமாருக்கு தான் முக்கியத்துவம் என்கிறார்கள்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இறுதிகட்டத்தை எட்டும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் ரஜினி ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது.ஆனால் ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படத்தின் கதையையும் இறுதி செய்திருக்கிறார் என்கிறார்கள். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இளைய தளபதியின் ‘விஜய் 62’ வேலையில் பிஸியாக இருக்கிறார். ஒருவேளை 2019 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தால், ரஜினியின் தேர்தல் அரசியலை டேக் ஆஃப் செய்யும் பொறுப்பை ஏ.ஆர்.முருகதாஸின் படம் எடுத்துக் கொள்ளும்! ‘காலா’வை தயாரிக்கும் தனுஷே அதை தயாரிக்கும் வாய்ப்புகள் அதிகம்!எனினும் தயாரிப்புப் பணிகள் குறித்து இன்னும் பேசப்படவில்லை. இப்போதைக்கு ரஜினிகாந்த்-ஏ.ஆர்.முருகதாஸ் காம்பினேஷனில் அரசியல் அதிரடி சரவெடிக்கு அஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறது.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com