Wednesday , 17 October 2018
Home » தமிழ்நாடு » யமகா, என்பீல்டு தொழிலாளர்களின் சிக்கலில்அரசு தலையிட்டு உடனடி தீர்வை காணவேண்டும்!

யமகா, என்பீல்டு தொழிலாளர்களின் சிக்கலில்அரசு தலையிட்டு உடனடி தீர்வை காணவேண்டும்!

1நவீன கொத்தடிமையாய் நடத்தும் தொழிற்சாலை நிர்வாகங்களை கண்டித்து அறவழியில் போராடி வரும் யமகா, என்பீல்டு தொழிலாளர்களின் சிக்கலில் அரசு தலையிட்டு உடனடி தீர்வை காணவேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள யமகா, என்பீல்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாய் நடத்தும் போக்கினை கண்டித்து தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள அறவழிப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி ஆதரப்பதாக தெரிவித்தார். விலைவாசி உயர்விற்கேற்ப, தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய மறுத்த ஒப்பந்த n;தாழிலாளர்களை பணிநீக்கமும் செய்துள்ள தொழிற்சாலை நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், உழைப்பவர்களுக்குரிய அடிப்படை வசதிகளையோ, தார்மீக உரிமைகளையோ தர மறுத்து கொத்தடிமைகளாய், தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் போராடிக்கொண்டிருக்கும் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உரிமைக்கும், உணர்விற்கும் மதிப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த, இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உடனடி தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com