Friday , 16 November 2018
Home » உலகம் » மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்

paul-allenஅமெரிக்காவின்பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் தனது 65வது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983 வரை இருந்தார். இந்நிறுவனத்தின் `ஐடியா மேன்’, `மேன் ஆஃப் ஆக்‌ஷன்’ என்று அழைக்கப்பட்டார். 30 வயது நிறைவடைவதற்குள் நிறுவனம் இவரை கோடீஸ்வரனாக்கிவிட்டது. புற்றுநோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார். நோயை வெற்றிகண்டு மீண்டும் களமிறங்கி வல்கன் வெஞ்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஆனால், மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் தீவிர வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்து வந்தார். தான் சம்பாதித்த பணத்தைச் சமூகத்துக்குத் திருப்பித்தர வேண்டும் என்ற உந்துதலில் உலகம் முழுவதும் பல நற்பணிகளைச் செய்துவந்தார்.
இந்நிலையில், தனது 65 வது வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் மற்றும் அவரது சகோதரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு மைக்ரோசாப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். பால் ஆலன் இழப்பு மைக்ரோசப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய இழப்பு என அவரது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com