காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக சரிந்ததால் நீர் திறப்பும் குறைக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகா, கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பல மழையால், மேட்டூர் அணை நிரம்பி தொடர்ந்து நீர்மட்டம் 120 அடியாக இருந்து வருகிறது. இந்நிலையில்
நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
இதனையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 7 ஆயிரத்து 600 கன அடியில் இருந்து 5 ஆயிரத்து 600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது.