Thursday , 20 September 2018
Home » தமிழ்நாடு » மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!

Metturமேட்டூர் அணையில் இருந்து இரண்டு லட்சம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால், ஒலி பெருக்கி மூலம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி கரை ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தங்குவதற்கு தேவையான இடமும் உணவும் வசதியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததை அடுத்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் தெற்கத்திகாடு, ரெட்டியூர் உள்ளிட்ட ஊர்களில் 2வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் வட்டாட்சியர் அறிவுடை நம்பி தலைமையில் வருவாய் துறையினர் ஒலிபெருக்கி மூலம் அபாய எச்சரிக்கை விடுத்தனர். 17 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் மேட்டூர் வந்தனர். இவர்கள் உயிர் காக்கும் சாதனங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர கிராமங்களில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com