Tuesday , 22 January 2019
Home » தமிழ்நாடு » மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்!

மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்!

2மேகதாது விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகள் பேச முன்வரவேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீ சித்தகங்கா மடம் சாமியார் சிவக்குமாருக்கு கடந்த சில தினங்களாக கல்லீரல் மற்றும் கணையத்தில் தொற்று நோய் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிவக்குமார் சாமியார் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரை சந்திக்க வந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே இருப்பது, இந்தியா பாகிஸ்தான் பிரச்னை கிடையாது என்று தெரிவித்தார். மேகதாது பிரச்சனையை சட்டரீதியாக தீர்க்க முடியாது எனவும், பேச்சுவார்த்தை மூலமாக தான் தீர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேகதாது அருகே அணை கட்ட ஆய்வறிக்கை தயார் செய்ய மட்டுமே அனுமதி கிடைத்துள்ளதாகவும், இது குறித்த தவறான புரிதல் பலரிடம் உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் குமாரசாமி விளக்கம் அளித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com