Sunday , 16 December 2018
Home » தமிழ்நாடு » மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தடுத்து நிறுத்துவோம்!

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தடுத்து நிறுத்துவோம்!

1கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசை கண்டித்து, திருச்சியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டவும், 400 மெகாவாட் நீர் மின்சாரம் தயாரிக்கவும் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆய்வு நடத்தவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை கண்டித்து, திருச்சி உழவர் சந்தை மைதானத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், தி.க. தலைவர் வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதனை தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், சட்டமன்றத்தில் தனது கன்னிப்பேச்சிலேயே உழவர் பிரச்சனை பற்றி குறிப்பிட்டவர் கலைஞர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நடைபெற்று வரும் போராட்டம் அரசியலுக்காக அல்ல என்றும், ஊழவர் கண்ணீரை துடைக்கவே இந்த போராட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார். —–

Facebook Auto Publish Powered By : XYZScripts.com