Monday , 20 November 2017
Home » சினிமா » மெர்சல் படத்திற்கு நடிகர் கமல் ஆதரவு…

மெர்சல் படத்திற்கு நடிகர் கமல் ஆதரவு…

மெர்சல் படத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நடிகர் கமல் படத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.

Kamalடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் பல்வேறு பிரச்சனைக்களுக்கு இடையே ஒரு வழியாக தீபாவளியன்று திரைக்கு வந்தது.

திரைக்கு வந்த பின்னர் மெர்சல் திரைப்படம் மேலும் அதிக பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. படத்தில் ஜி.எஸ்.டிமற்றும் டிஜிட்டல் இந்தியா போன்றவை குறித்து எதிர்மறையான வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழக பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்பினை தொடர்ந்து அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்குவதாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் கமல் மெர்சல் படத்திற்கு முன்னரே தணிக்கை சான்றிதல் வழங்கி விட்டதால் அதை மீண்டும் தணிக்கை செய்யக்க்கூடாது என தெரிவித்துள்ளார்.

விமர்சனங்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் எனவும் மாற்றுக் கருத்துகளை முன்வைப்போரை அமைதியாக்க முயற்சிக்காதீர்கள் என்றும் மாற்றுக் கருத்துகளை முன்வைக்கப்படும் போது தான் இந்தியா மிளிரும் எனவும் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com