Monday , 20 November 2017
Home » இந்தியா » மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்த ப.சிதம்பரம் …

மெர்சல் படத்திற்கு ஆதரவு தெரிவித்த ப.சிதம்பரம் …

Chithambaram_1அரசின் கொள்கைகளை பாராட்டி மட்டுமே படம் எடுக்க வேண்டும் என சட்டம் வந்தாலும் வரலாம் என ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

மெர்சல் படத்தில் சில வசனங்களை நீக்க வேண்டும் என பா.ஜ.க. கூறியது. இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மெர்சல் படத்தில் சில வசனங்களை நீக்க பா.ஜ.க. கோரிக்கை வைத்துள்ளது என்றும், ஒருவேளை பராசக்தி படம் இப்போது வெளியாகி இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

படம் எடுப்போர் கவனத்திற்கு என சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசின் கொள்கைகளை பாராட்டி மட்டுமே படம் எடுக்க வேண்டும் என சட்டம் வந்தாலும் வரலாம் எனவும் கிண்டல் செய்துள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com