Monday , 18 February 2019
Home » இந்தியா » மும்பை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

மும்பை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து 7 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

3மும்பை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை சேம்பூரில் உள்ள 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடியில் தீப்பிடித்தது. இதனால் கீழ்த் தளங்களில் இருந்தவர்கள் வேகமாக வெளியேற்றப்பட்டனர். ஆயினும் தீ வேகமாகப் பரவியதால் பலர் கட்டடத்தின் மேல்தளங்களில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர். இந்த தீ விபத்தில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com