Friday , 16 November 2018
Home » தமிழ்நாடு » முதலமைச்சர் பழனிச்சாமி 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது விரைவில் நிரூபிக்கப்படும்!

முதலமைச்சர் பழனிச்சாமி 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது விரைவில் நிரூபிக்கப்படும்!

DMKமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது விரைவில் நிரூபிக்கப்படும் என்று தஞ்சையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தஞ்சையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 580 பேர் தி மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர். பின்னர் அவர்களை வரவேற்று பேசிய மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா இருந்த போது சர்வாதிகாரி ஆட்சி நடத்தினார் என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். முதலமைச்சர் எடப்பாடி 3 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தார் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் என்று கூறினார். மேலும் ஜெயலலிதா ஆட்சியை விட எடப்பாடி ஆட்சியில் ஊழல் பெருமளவு பெருகிவிட்டதாக மு.க.ஸ்டாலின் புகார் தெரிவித்தார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com