Monday , 20 November 2017
Home » தமிழ்நாடு » முதலமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார் கடிதம் …

முதலமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார் கடிதம் …

ARPUTHAMMAL_01320பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை 30-நாட்கள் நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு பேரறிவாளனின் தாயார் கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் 26 ஆண்டுகளாக பேரறிவாளன் தன்டனை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது பெற்றோர் பேரறிவாளனுக்கு 30-நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அரசுக்கு கடிதம் எழுதினர்.

இந்த கடிதத்தை  பரிசீலித்து ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதியில் இருந்து 30 நாட்களுக்கு பல்வேறு நிபந்த னைகளுடன் பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில்  வசித்து வந்தார்.

இதனை அடுத்து கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதியோடு பேரறிவாளனுக்கு அளிக் கப்பட்ட பரோல் முடி வடைந்த நிலையில் அவரது தாயார் அற்புதம்மாள், முதலமைச்சருக்கு பரோலை மேலும் 30-நாட்கள் நீட்டிக்கும்படி கடிதம் எழுதினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பேரறிவாளனுக்கு 30-நாட்கள் பரோல்  வழங்கினார். அதன் அடிபடையில் அக்டோபர் 24-தேதி வரை பரோல் காலம் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

தற்போது நீட்டிக்கப் பட்ட பரோல் முடிவடைய உள்ளதால் மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரறிவாளனின் தாயார். கடிதம் எழுதியுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com