Monday , 25 October 2021
Home » மாவட்டம் » தூத்துக்குடி » மீன் பிடித்து கொண்டிருந்த போது ஆற்றில் தத்தளித்த 7 பேர் பத்திரமாக மீட்பு

மீன் பிடித்து கொண்டிருந்த போது ஆற்றில் தத்தளித்த 7 பேர் பத்திரமாக மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென நீர்வரத்து அதிகமானதால் ஆற்றில் தத்தளித்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தாமிரபரணி ஆற்றின் முக்காணி அருகே உள்ள தடுப்பணை பகுதியில் முட்டு அளவில் இருந்த தண்ணீரில் இறங்கி சவேரியார்புரத்தை சேர்ந்த 7 பேர் தூண்டில் மூலம் மீன் பிடித்தனர். இந்நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் மாலை 6 மணியளவில் ஆற்றின் நீர்வரத்து திடீரென அதிகரித்தது.

இதனால் 7 பேரும் ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்து தங்களை காப்பாற்றும்படி அலறினர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் புன்னக்காயல் மீனவர்கள் உதவியுடன் ஆற்றில் தத்தளித்த 7 பேரையும் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com