Sunday , 22 July 2018
Home » முக்கிய செய்திகள்: » மீண்டும் பங்குகளை வாங்க முடிவு ; இன்ஃபோஸிஸ் நிறுவனம் அதிரடி…

மீண்டும் பங்குகளை வாங்க முடிவு ; இன்ஃபோஸிஸ் நிறுவனம் அதிரடி…

download3,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மீண்டும் வாங்கவுள்ளதாக இன்ஃபோஸிஸ் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

நாட்டின் 2வது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதன்மை செயலதிகாரி உள்ளிட்ட பதவிகளிலிருந்து விஷால் சிக்கா அண்மையில் ராஜினாமா செய்தார். இதனால் பங்குச்சந்தையில் இன்ஃபோஸிஸ் நிறுவன பங்குகளின் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது.

இதையடுத்து, 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 5 ரூபாய் முகமதிப்பு கொண்ட, முழுமையாக செலுத்தப்பட்ட பங்குகளை திரும்ப வாங்க இன்ஃபோஸிஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மும்பை பங்குச்சந்தையில் அந்த நிறுவனம் சமர்ப்பித்த ஆவணத்தில், ஒப்பந்த முறையில் 1,150 ரூபாய் விலையிலான 11.3 கோடி பங்குகளை, 13,000 கோடி ரூபாய் வரை செலவிட்டு, திரும்ப வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்திற்கான பங்கு விகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைக்கான சிறப்பு தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு அதற்கான ஒப்புதல், நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களிடம் தபால் வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com