Friday , 16 November 2018
Home » உலகம் » மீண்டும் சந்திக்க விருப்பம் கிம் ஜாங் அன்னுக்கு டொனால்டு டிரம்ப் கடிதம்

மீண்டும் சந்திக்க விருப்பம் கிம் ஜாங் அன்னுக்கு டொனால்டு டிரம்ப் கடிதம்

trumpவடகொரியாவில் நேற்று நடந்த 70-வது ஆண்டு விழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த விழாவையொட்டிய பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு எப்படி நடைபெறப்போகிறது, வடகொரியா தனது ஆயுத பலத்தை காட்டுமா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடம் பெறச்செய்யுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர்.அதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தன.அணிவகுப்பை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜின்பிங்கின் சிறப்புத்தூதர், லி ஜான்சுவுடன் பார்வையிட்டார்.ராணுவ அணுவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறாதது அமெரிக்காவுக்கு நிம்மதியை அளிப்பதாக அமைந்தது.இந்நிலையில், டிரம்பிற்கு கிம் ஜாங் அன் கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது :-கிம் ஜாங் அன் அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார். மிகவும் நல்ல விஷயங்களை உள்ளடக்கிய நேர்மறையான கடிதமாக அமைந்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிகைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுஅந்த கடிதத்தின் பிரதான நோக்கம் அதிபருடன் மீண்டும் சந்திப்பை திட்டமிடுவதே ஆகும், இந்த சந்திப்பை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஏற்கெனவே நாங்கள் ஈடுபட தொடங்கிவிட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com