Monday , 18 February 2019
Home » சினிமா » மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் ரஜினிகாந்தின் 2.0

மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் ரஜினிகாந்தின் 2.0

6ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூ.542 கோடிக்கு மேல் செலவில் எடுத்துள்ள இந்த படம் நவம்பரில் திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட் தரத்தில் இருந்ததாக உற்சாகம் அடைந்துள்ளனர்.ராட்சத பறவைகளும் செல்போன்களும் டிரெய்லரில் முக்கியத்துவம் பெற்று இருப்பதால் செல்போன் டவர்களால் பறவைகளுக்கு நேரும் பாதிப்புகளை படத்தில் பேசி இருக்கலாம் என்று யூகமும் உள்ளது. கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் டிரெய்லர் பிரமிப்பாக உள்ளது என்கின்றனர். ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும் மிரட்டி இருக்கிறது.1 நிமிடம் 31 வினாடிகள் இந்த டிரெய்லர் ஓடுகிறது. கற்பனையை மிஞ்சிய காட்சிகள் உள்ளன. இந்த டிரெய்லர் தியேட்டர்களில் 3டி வடிவில் திரையிடப்பட்டது. யுடியூப்பில் 2டியில் வெளியானது.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com