Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 50
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம்page 50

மாவட்டம்

அதிமுகவினர் பொது கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை வரவழைக்கிறார்கள் விஜயகாந்த் குற்றசாட்டு

முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பரப்புரைக் கூட்டங்க‌ளுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்து ஆட்களை ‌அழைத்துச்செல்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது விஜயகாந்த் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை கருணாநிதியையும், ஸ்டாலினையும் மனம் குளிர‌ வைக்காத கட்சிகளை ஒடுக்க நினைப்பார்கள் என்று குறை கூறினார். மேலும் ஜெயலலிதா தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் தங்கள் பதவிகளை காப்பாற்றிக்கொள்ள பணம் கொடுத்து ஆட்களை கொண்டுவந்து ... Read More »

புதுக்கோட்டையில் காவலருக்கு அடி, உதை;மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததாக மக்கள் புகார்

புதுக்கோட்டையில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக காவலரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்தனர். கடலோர காவல் படையில் பணி புரியும் நெப்போலியன் என்பவர், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்றின் மீத‌ மோதியதில் ஆனந்தன‌ என்பவர் காயமடைந்தார். பின்னர், தப்பியோட முயன்ற காவலர் நெப்போலியனை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து அடித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், நெப்போலியனை அங்கிருந்து மீட்டுச் சென்றனர். Read More »

காதல் திருமணம் செய்த பெண் உயிரிழப்பு;திருச்செந்தூரில் பரபரப்பு

திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட சசிகலா என்ற பெண் உயிரிழந்துள்ளதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். ஆத்தூரைச் சேர்ந்த சசிகலா என்பவரும், மரந்தலையைச் சேர்ந்த நவீன் குமார் என்பவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில், அளவுக்கதிகமாக தூக்க மாத்திரையை உண்டு சசிகலா மயங்கியுள்ளார். ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சசிகலாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நவீன் குமாரைக் கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள்‌ மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, நவீன் குமார் கரும்பூர் ... Read More »

நடுவானில் திடீரென எந்திர கோளாறு-விமானியின் கவனத்தால் விபத்து தவிர்ப்பு

ஆலந்தூர் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து மதுரைக்கு நேற்று அதிகாலை 6.15 மணிக்கு 72 பயணிகள், 4 விமான சிப்பந்திகளுடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் சென்றபோது அதில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அந்த விமானத்தை தொடர்ந்து மதுரைக்கு இயக்க முடியாததால் விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதிக்கும்படி விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். பின்னர் காலை 7 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. பின்பு ... Read More »

நீர்வள ஆதாரக் கொள்கைகளை உருவாக்கி, அதற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும்

நீர்வள ஆதாரக் கொள்கைகளை உருவாக்கி, அதற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டுமென சூழலியல் உரிமைக்கான இளையோர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் உரிமைக்கான இளையோர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற 2016 கவன ஈர்ப்பு கூட்டத்திற்கு மாநில தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், சிக்கிம் மாநிலத்தைப் போல் இயற்கை விவசாயத்துக்கென சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், சிறு,குறு விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடனுதவி அளித்து,உற்பத்தி பொருள்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் உரிமை தர வேண்டும் என்பன ... Read More »

தமிழகம் முழுவதம் தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனையில் பல லட்சம் ரொக்கம் பறிமுதல்

தமிழகம் முழுவதம் தேர்தல் பறக்கும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன சோதனையில் பல லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சிவராஜன் தலைமையில் மேற்கொண்ட அதிரடி சோதனையில், சுய உதவிக்குழுவினருக்கு ரூபாய் 5-லட்சம் வழங்கியபோது, பிடிபட்டனர். தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள அறக்கட்டளை மூலம் பணப்பட்டுவாடா செய்வதாக, அதிகாரிகளுக்கு வந்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, Read More »

மூடப்படாத சாக்கடைக் குழியில் விழுந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு

திருப்பூரில், மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் மூடப்படாத சாக்கடைக் குழியில் விழுந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்ததிற்கு கண்டனம் தெரிவித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 59-வது வார்டு தனலட்சுமி நகரில் இரமேஷ் – சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது ஒன்றரை வயது மகன் ஸ்ரீதர், வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது, திடீரென காணாமல் போனான். பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், அருகில் மூடப்படாத சாக்கடைக் குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த ... Read More »

தேனி அருகே கூடலூரில் கொட்டப்படும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்

தேனி அருகே கூடலூரில் கொட்டப்படும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி, நகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட விடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெத்தக்குளம் குப்பை கிடங்கில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாற்று இடத்தில் குப்பை கிடங்கை அமைக்கக்கோரி, நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த நகராட்சி அலுவலர்கள் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ... Read More »

76-லட்சம் மதிப்பிலான 9-ஆயிரத்து 940 மொபைல் போன்களை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

மதுரையில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 76-லட்ச மதிப்பிலான 9-ஆயிரத்து 940 மொபைல் போன்களை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மதுரை பாசிங்காபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மானாமதுரை சிப்காட் தொழில் பூங்காவிலிருந்து வந்த வாகனத்தை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிய ஆவணமின்றி பிற மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லும் 76-லட்ச மதிப்பிலான 9-ஆயிரத்து 940 மொபைல் போன்களை, பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன் மொபைல்போன்கள் உரிய நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்படும் என, மாவட்ட ... Read More »

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் தீவிரவாகன சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துவரப்படும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே எழுமாத்தூர் சோதன சாவடியில் வாகன தனிக்கையின்போது, பொதுப்பணித்துறை செந்தில்குமார் எந்தவித ஆவணமுமின்றி எடுத்துவரப்பட்ட ஒரு லட்சத்து 50-ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட கரூவுலத்தில் ஒப்படைத்தனர். Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com