Monday , 25 October 2021
Home » மாவட்டம்page 5

மாவட்டம்

நாளை சூரசம்ஹாரம் – திருச்செந்தூரில் ஏற்பாடுகள் தீவிரம்

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெறுவதை ஒட்டி அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. சஷ்டி விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை கடற்கரையில் நடைபெறுகிறது. லட்ச்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என கருதி ... Read More »

ஈரோட்டில் உள்ள அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

ஈரோடு: ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தின் உரிமையாளர் அசோக்குமார் ஜிஎஸ்டி மோசடி வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். கட்டுமான பொருட்களை தயாரிக்கும் அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். Read More »

குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

நெல்லை: குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் அனுமதி வழங்கப்பட்டது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 3 நாட்களாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. Read More »

தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

தேனி: தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 2ம் தேதி முதல் 135 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டுகளுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீர் திறப்பால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என அவர் தெரிவித்துள்ளார். விவாசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனக் கூறியுள்ளார் Read More »

பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை தாண்டி உயர்வு

12 ஆண்டுகளுக்குப்பின் பவானிசாகர் அணை நீர்மட்டம் முதல்முறையாக 102 அடியை தாண்டியுள்ளது. 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கடந்த அக்டோபர் 22 ம் தேதி அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அக்டோபர் மாத இறுதி வரை பவானிசாகர் அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி ... Read More »

குமரி மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

புயல் எச்சரிக்கை குறித்த அடுத்த அறிவிப்பு வரும் வரை குமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள மகா புயலால், கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், குமரி மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த, குமரி மாவட்டத்தின் ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மழை பொழிந்துள்ள பொழிந்துள்ளதாக தெரிவித்தார். Read More »

பவானி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் – வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால் அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளதால் அணையிலிருந்து பவானி ஆற்றில் விநாடிக்கு 14 அயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக சத்தியமங்கலம் நகர்ப்பகுதியின் நடுவே ஓடும் பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் ஆற்றின் கரையோரத்தில் ... Read More »

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேர் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேர் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 35 பேர் இடமாற்றம்- தமிழக அரசு நடவடிக்கை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் ... Read More »

ரஜினிகாந்துடன் கூட்டணியா? – கமல்ஹாசன் பதில்

ரஜினிகாந்துடன் அரசியலில் இணைந்து பயணிப்பது தொடர்பாக இருவரும் பேச வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ஒரு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- கேள்வி:- கட்சி நடத்த உங்களுக்கு பணம் எங்கு இருந்து வருகிறது என்ற விமர்சனங்களுக்கு பதில்? பதில்:- ‘என் பாக்கெட்டில் இருந்துதான் வருகிறது. என் கட்சியில் உள்ள பலரும் அவரவர் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து போட்டுத்தான் கட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறோம். ‘இங்கிருந்து ... Read More »

கோவை-நாகூரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை

கோவை-நாகூரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கோவையில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உக்கடம் ஜி.எம் நகரில் நிசார் என்பவரது வீட்டிலும், லாரிபேட்டையில் சவுருதீன் என்பவரது வீட்டிலும், 5 பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து அங்கு, மாநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நாகூரிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com