Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 40
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம்page 40

மாவட்டம்

சில்லறை தட்டுப்பாட்டுக்கான காரணம் என்ன ?அருந்ததி பட்டாச்சார்யா விளக்கம்

சில்லறை தட்டுப்பாட்டுக்கான காரணம் குறித்து எஸ்பிஐ வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா விளக்கம் அளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நூறு ரூபாய் நோட்டுகளை செலவு செய்ய மக்கள் தயங்குவதே சில்லறை தட்டுப்பாட்டுக்கான காரணம் என்று விளக்கம் அளித்தார். மேலும், புதிய ஐநூறு ரூபாய் நோட்டுகள் போதிய அளவு புழக்கத்திற்கு வந்தவுடன் இந்த தட்டுப்பாடு முற்றிலும் நீங்கும் என்றும் அவர் கூறினார். வங்கி கடன் வட்டி சதவீதங்கள் அடுத்த மாதம் குறைய வாய்ப்பிருப்பதாகவும் அருந்ததி கூறினார். டிஜிட்டல் பரிவர்த்தனை எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை எண்ணிக்கை ... Read More »

தஞ்சையில் அதிமுக முன்னிலை..

தஞ்சை தொகுதியில் ஆறாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி 12,265 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தமிழகத்தின் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளிலும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் தமிழகத்தின் மூன்று தொகுதிகளிலும் ஆளும் கட்சியான அதிமுக முன்னிலையில் உள்ளது. தஞ்சை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருக்கிறது. இதில் ஆறாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ... Read More »

நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றிபெற்றதன்மூலம் முதலமைச்சர் பதவியை தக்க வைத்தார் நாராயணசாமி

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முதலமச்சர் நாராயணசாமி வெற்றி பெற்றார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மூன்றாம் சுற்று முடிவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி 18707 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் 7564 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் நாராயணசாமி 11143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் தனது முதலமைச்சர் பதவியை தக்க வைத்துள்ளார் நாராயணசாமி. Read More »

புதிய ரூபாய்களை எடுத்துவிட்டு பழைய ரூபாய்களை வைத்த இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட்

வேலூர் அருகே போக்குவரத்து பணிமனையில் புதிய ரூபாய்களை எடுத்துவிட்டு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய்களை வைத்த இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் சோளிங்கரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இங்கு தினமும் ரூ.5 லட்சம் முதல் 7 லட்சம் வரை வசூல் செய்யப்படுகிறது. அங்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஜோசுவா மற்றும் காசாளர் ராஜாராம் ஆகியோர் வசூல் செய்யப்பட்ட தொகையை தினமும் வங்கியில் செலுத்தி மாற்றி வந்துள்ளனர். வேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இதுவரை ... Read More »

தாய்க்கும் ராணுவ வீரர்களுக்கும் விருதை சமர்ப்பிக்கிறேன் ; பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட துவக்கவிழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உன்னத சேவைக்கான விருது வழங்கப்பட்டது. கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட துவக்கவிழாவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உன்னத சேவைக்கான விருது வழங்கப்பட்டது.இந்த விருதை பெற்றுக்கொண்டு பேசியவர், என்னை விட பல சாதனைகளைப் படைத்த பெரிய ஜாம்பவான்கள், மூத்த கலைஞர்கள் இந்த விருதை வென்றிருப்பார்கள். நானும் கொஞ்சம் சாதித்துள்ளேன் என்று நினைக்கிறேன் என கூறினார். கவுரவமிக்க இந்த விருதை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன். அடுத்ததாக, நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் வாழ்ந்து கொண்டிருக்கும், வீர மரணமடைந்த உண்மையான ஹீரோக்களான ராணுவ ... Read More »

தமிழகத்தில் தொடரும் அவலம்..மேலுமொரு விவசாயி தற்கொலை..!

தஞ்சாவூர் மாவட்டம் பொன்னவராயன் கோட்டையில், தண்ணீரின்றி பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி பூச்சி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பொன்னவராயன் கோட்டை பகுதியில் மாசிலாமணி என்ற விவசாயி 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு வாங்கி சம்பா பயிர்கள் சாகுபடி செய்து வந்துள்ளார். தண்ணீர் இல்லாத காரணத்தால், சம்பா பயிர்கள் காய்ந்து பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் விவசாயிக்கு நிலத்தை குத்தககைக்கு விட்ட உரிமையாளர் தனக்கு உரிய நெல் தர வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விவசாயி பூச்சி மாத்திரை சாப்பிட்டு ... Read More »

நோட்டாவுக்கு ஓட்டு போடப்போவதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவிப்பு

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் நோட்டாவுக்கு ஓட்டு போடப்போவதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த உச்சநீதிமன்றம், தடையை ரத்து செய்யக்கோரிய தமிழக அரசின் சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லாததால் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று நடைபெறும் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் விதமாக நோட்டாவுக்கு ஓட்டு போடப்போவதாக அவனியாபுரத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்போர்கள் அறிவித்துள்ளனர். Read More »

நெல்லித்தோப்பு தொகுதியில் வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை வாக்களித்தார். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக நாராயணசாமி கூறியுள்ளார். மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் காலை 8 மணி நிலவரப்படி 11% வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். Read More »

நாட்டிலேயே முதல் முறையாக நெல்லித்தொப்புத் தொகுதியில் ஆன்லைன் வாக்குப்பதிவு

நாட்டிலேயே முதன்முறையாக நெல்லித் தோப்பு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிக்க ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வி.நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம் (எ) சரவணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை மற்றும் 4 சுயேச்சைகள் உள்பட 8 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு 26 வாக்குச்சாவடிகளில் தொடங்கியது. ... Read More »

தஞ்சாவூர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி15% வாக்குப்பதிவு

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தின் தஞ்சாவூர் தொகுதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தஞ்சாவூர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 15% வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் ராமலிங்கம் சவுராஸ்டிரா, திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் வாக்களித்துள்ளனர். தஞ்சாவூர் தொகுதியில் 2,68,516 வாக்காளர்கள் வாக்களிக்க ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com