Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 30
Friday , 1 July 2022
Home » மாவட்டம்page 30

மாவட்டம்

ஆசிரியர் பணி மாறுதல் முறையாக நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு கடந்த 11ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டங்களாக நடைபெற்று வருகிறது முறையாக கலந்தாய்வு நடைபெறவில்லை என ஒவ்வொரு மாவட்டத் திலும் ஆசிரியர்கள் கடந்த 10 நாட்களாக போராடி வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 4 கல்விமாவட்டங்களான கும்பகோணம், பட்டுக்கோட்டை , ஒரத்தநாடு, தஞ்சாவூருக்கான கலந்தாய்வு புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷ்னி தலைமையில் நடைபெற்றது ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வந்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, ... Read More »

வெடிமருந்து தொழிற்சாலை மூடும் நிலை தொழிளாளர்கள் பல கட்டப் போராட்டம்

நீலகிரி மாவட்ட குன்னூர் அருகே உள்ள அருவங்காடு கார்டைட் வெடிமருந்து தொழிற்சாலை மூடும் நிலையில் உள்ளதால் தொழிளாளர்கள் பல கட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 3ம் கட்ட போராட்டமாக தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நமது இந்திய ராணுவத்தின் முதுகெலும்பாய் விளங்குகின்ற வெடி மருத்து தளவாட தொழிற்சாலையின் முதன்மையாக விளங்குகின்ற கார்டைட் தொழிற்சாலை ஆகும். மத்திய அரசின் வெடி மருத்து தளவாடப் பொருட்களை வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்கின்ற தவறான கொள்கையால் உள்ளூர் உற்பத்தி குறைந்து தொழிற்சாலை நலிவு அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களின் ... Read More »

ஒ.என்.ஜி.சி குழாய் உடைந்து எண்ணெய் எரிவாயு கசிந்து நெற்பயிர்கள் நாசம்

நாகை மாவட்டம் மயிலாடு:துறை அருகே பாண்டூர் கிராமத்தில் 2 இடங்களிலும், அருகே பொன்னூர் கிராமத்தில் இரண்டு இடங்களிலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எரிவாயு எடுத்து குழாய் மூலம் குத்தாலத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வருகின்றனர். பாண்டூர் பகுதியில் நான்கு இடத்தில் இருந்து வரும் குழாய்களும் ஒன்றிணைத்து அங்கிருந்து குத்தாலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. விளைநிலங்களில் 3 அடி ஆழத்திற்கு குழாய்கள் பதித்துள்ளனர். பாண்டூர்-பொன்னூர் சாலையில் ராஜதுரை என்பவர் வயலில் தற்போது குறுவை நெல் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் நடவு செய்யப்பட்ட வயலில் குழாய் உடைந்து கச்சா ... Read More »

காவிரி நதி மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் வைகைசெல்வன் பேச்சு!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பிடமங்களம் எம்.ஜி.ஆர். திடலில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாந்தோனி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலம்.தங்கராஜ் உள்ளிட்டகட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள்,மகளிர் அணியினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சிறப்புரை நிகழ்த்திய அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் வைகை செல்வன்,மத்தியில் ஆண்ட மன்மோகன்சிங் ஆட்சிக்கு முட்டுகட்டை கொடுத்து 17-ஆண்டுகாலம் ஆட்சி ... Read More »

நீலகிரி மாவட்டம் கடசனக்கொல்லி பகுதியில் இறந்த புலி ஆண்புலி பலி!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனகோட்டத்திற்குட்பட்ட பாடந்தொரை பகுதியில் உள்ள கடசனக்கொல்லி வனப்பகுதியில் ஆண்புலி ஒன்று இறந்துகிடப்பது குறித்து வேட்டைதடுப்பு காவலர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்தில் இறந்த புலியை பார்வையிட்ட கூடலூர் கோட்ட வன அலுவலர் ராகுல் மற்றும் வனச்சரகர் ராமகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் இறந்தப் புலியை பார்வையிட்டு விசாரனை நடத்தியதோடு அப்பகுதியில் இருந்து புலியை மீட்டு கூடலூர் வன சரகம் அலுவலகத்திற்கு வாகனத்தில் எடுத்து சென்றனர். புலியின் உடலை பிரேதபரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த புலியின் வயது ... Read More »

அரசு பேருந்து ஓட்டுநர் பணிமனை அலுவலகம் மேல் ஏறி தற்கொலை முயற்சி.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு போக்குவரத்துப் பணிமனை அலுவலகம் மேல் ஏறி அதிமுக பிரமுகர் ஓட்டுநர் முருகாணந்தம் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டுள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அண்ணா தொழிற்சங்க பொருளாலர் ஓட்டுநர் ரமேஷ் என்பருடன் …முருகாண ந்தத்திற்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இது குறித்து மனமுடைந்த முருகாண ந்தம் போக்குவரத்து பணிமனை பொது மேளாலரிடம் புகார் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து மன உளைச்சலுக்கு ஆளான முருகாணந்தம் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ... Read More »

மத்திய அமைச்சராக இருந்து கொண்டு சட்டம் ஒழுங்கு குறித்து கூறுவது சரியாக இருக்காது – கடம்பூர்.செ.ராஜீ 

மத்திய அமைச்சராக இருந்து கொண்டு சட்டம் ஒழுங்கு குறித்து கூறுவது சரியாக இருக்காது என்றும், சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவதில் மாநில அரசுக்கு எந்தளவுக்கு பங்கு உண்டோ, அதே பங்கு மத்திய அரசுக்கும் உண்டு. தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இனி திறக்கப்படமாட்டாது என  முதல்வர் உத்தரவாதம் அளித்துள்ளதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வள்ளிநாயகிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை வள்ளிநாயகபுரத்தில் ரூ.1.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தொட்டி மற்றும் ... Read More »

அரசு தடை செய்யப்பட்ட கடல் பசுவை பிடித்த மீனவர்கள் 3 பேர் கைது!!

தொண்டியில் அரியவகை கடல்பசுவை பிடித்த மீனவர்கள்! விற்க முயற்சிக்கும்போது பிடிபட்டனர்! இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எம்.ஆர்.பட்டிணம் கடல் பகுதியில் சுமார் 10 நாட்டிக்கல் தொலைவில் தொண்டி அருகே கடற்கரையோர கிராமமான நம்புதாளை கடற்கரை பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று இரவு கடலில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது அரிய வகை மீன் இனமாக கருதப்படும் கடல் பசு மீனவர்கள் வலையில் சிக்கியது.வலையில் சிக்கிய அரிய வகை கடல் பசு சுமார் 500 கிலோ எடை கொண்ட ஆண் கடல் பசுவாகும். அதிக ... Read More »

சேலத்தில் 20 லட்சம் ரூபாய்  குட்கா பொருட்கள் பறிமுதல்!!

சேலத்தில் வீடு மற்றும் குடோன்களின் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேலம் அன்னதானப்பட்டி கே.எஸ் கார்டன் பகுதியில், ஏராளமான மாவு மில்கள், அரிசி குடோன்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றில் குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு சேலம் மாநகர் முழுக்க விநியோகம் செய்யப்படுவதாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆணையர் உத்தரவின் பேரில், அன்னதானப்பட்டி காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 2 குடோன்கள் மற்றும் வீடு ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 ... Read More »

சேலத்தில் அமைக்கப்படும் பசுமை சாலை பொதுமக்களுக்கு அவசியம் -அமைச்சர் கருப்பணன்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள வளையகாரபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சத்துணவு மையம் கட்ட பூமி பூஜையில் கலந்து கொண்ட தமிழகசுற்றுச் சூழல்துறை அமைச்சர் ;கருப்பணன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த பொழுது கூறுகையில் தமிழகத்தில் சுற்றுச்சூழுல் மாசு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.தமிழகத்திற்க்கு 8 வழிச்சாலை 100 சதவிகிதம் தேவை இதனால் நேரம் மிச்சம் படுத்தபடுகிறது. நிலமஉரிமையாளர்களுக்கு அந்த பகுதியில் உள்ள விலையை விட கூடுதலாக அரசு வழங்ககிறது இதன் காரணமாக இவர்கள்சாலை அமைக்க இடம்வழங்கிவிட்டு ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com