செங்கல்பட்டு அருகே வெட்டுகாயங்களுடன் இளைஞர் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுப்பு கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வல்லம் பகுதியில் வெங்கடேஸ்வரா நகர் உள்ளது. இங்கு இப்பகுதியில் உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் சடலம் இருப்பதாக அருகே உள்ள பொதுமக்கள் கொடுத்த தகவலின்படி, அங்கு விரைந்த செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறையினர். வெட்டுகாயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த இளைஞரின் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் கொலையுண்டவர் யார்? கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு ... Read More »
மாவட்டம்
எஸ்.பி.கே. நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆனந்தபுரியில் எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் செய்யாத்துரை வீட்டில் செய்யாத்துரை மற்றும் மகன்கள் நாகராஜ், கருப்பசாமி பாலசுப்பிரமணியன் ஆகியோரிடம் சென்னை வருமானவரித்துறையினர் அதிகாரிகள் 5 வது நாளாக விசாரணை.முடிந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி அலுவலகம் சீல் வைப்பு .அருப்புகோட்டை அனந்தபுரியில் உள்ள எஸ்.பி.கே.கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் செய்யாத்துரை. இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட நகராட்சி சாலைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செயல்பட்டு வருகிறார். இவருக்கு கல்குவாரிகள் கிரசர்கள் பஞ்சுநூற்பாளை என பல்வேறு தொழில்கள் ... Read More »
பொறியியல் படிப்புகளுக்கான பொதுக் கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி தொடங்குகிறது
தேர்வான மாணவர்கள், பின்னர் மருத்துவம் மற்றும் விவசாயப் படிப்பு கலந்தாய்வுகளில் கலந்து கொண்டு பொறியியல் படிப்பிலிருந்து விலகிச் சென்றதனால்,கடந்த ஆண்டுகளில் தகுதியான மாணவர்களுக்கு, தகுதியான பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு தவறியதால்,இந்த முறை நீதிமன்ற அனுமதிப் பெற்று, பொறியியற் படிப்பு கலந்தாய்வு தள்ளிப் போடப்பட்டு,வருகிற ஜூலை 25ந் தேதி துவங்குகிறது.தமிழகத்தில் நலன்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசிடம் இருந்து பெறுவதில் ஜெயலலிதா சுணக்கம் காட்டியது இல்லை.அதே போன்று தமிழகத்தின் நலன் காக்கும் எந்த ஒரு திட்டத்தையும் போராடிப் பெறுவதில் இன்றைய தமிழக அரசு ... Read More »
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சி அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நகராட்சியின் ஆணையாளர் செந்தில்முருகன் ஆலோசனையின் பேரில் நகராட்சி மேலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கியமாக உணவு பேக்கிங் செய்வதற்கான பிளாஸ்டிக் சீட்,பிலிம் ஒட்டிய சீட்,பதிலாக வாழை இலை,பாக்கு மர இலை பயன் படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.சாப்பாட்டு மேசையில் விரிக்கும் பிளாஸ்டிக் சீட்டுக்கு பதிலாக பேப்பர் ரோல் பயன்படுத்தவும்,பிளாஸ்டிக் தெர்மா கோல்கள்,பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் தட்டுகளுக்கு பதிலாக வாழை இலை,பாக்கு ... Read More »
ஆளில்லா வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை குற்றவாளிகள் கைது
ஆவடி சுற்றுவட்டார பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து வந்த குற்றவாளிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்து 30 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் பூட்டிய வீட்டில் கொள்ளை அடிக்கும் மர்ம நபர்கள் ஆவடி பேருந்து நிலையம் அருகே சுற்றி திரிவதாக ஆவடி காவல் உதவி ஆணையர் ஜெயராமனுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் ஆவடி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றி திரிந்த இருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை ... Read More »
கோட்டைப்பட்டிணத்தில் அரிய வகை கடல் அட்டைகள் பறிமுதல் !!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணத்தில் அரிய வகை கடல் அட்டைகளை கடலோரபாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணம கடற்கரை பகுதியில் அரிய வகை கடல் அட்டைகள் சேகரிக்கப்பட்டு கடத்தப்படுவதாக கடலோரபாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் திருப்புனவாசல் கடலோரபாதுகாப்புகுழும சப்இன்ஸ்பெக்டர் ரகுபதி,மணமேல்குடி சப் இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான போலீசார் கடற்கரையில் ஆய்வில் ஈடுபட்டபோது கோட்டைப்பட்டிணம் யாகூப்சன்பேட்டையை சேர்ந்த நைனாமுகமது மகன் சுலைமான்(52) என்பவர் நூறு கிலோ எடையுள்ள 400க்கும் மேற்பட்ட ரூ.50 ஆயிரம் ... Read More »
ரஷ்ய நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை 4 பேர் கைது !!
திருவண்ணாமலையில், ரஷ்ய நாட்டு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலைக்கு கடந்த 12 ஆம் தேதி வந்த ரஷ்ய நாட்டு இளம்பெண், கிரிவலப்பாதையில் உள்ள விடுதியில் தங்கிருந்தார். கடந்த 16 ஆம் தேதி விடுதி அறைக்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மயங்கி கிடந்த அந்த பெண்ணுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் ... Read More »
ஒசூரில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலுள்ள தனியார் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போரட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலிஸார் கைது செய்து மாலை விடுவித்தனர்.ஒசூர் முதல் சிப்காட் பகுதியிலுள்ள மின்சார சாதனங்கள் உற்பத்தி செய்யும் (ஈஸன் ரீ ரோல்) தனியார் தொழிற்சாலை கடந்த 1979ம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.தற்போது 5 பெண்கள் உட்பட 68 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் , 6 வருட காலமாக பல்வேறு தொழில் பிரச்சனை காரணமாக தொழிற்சாலை சரி வர இயங்கவில்லை, இதனை தொடர்ந்து கடந்த மாதம் 29ம் தேதி தொழிலாளர்கள் தங்களுடைய மாத சம்பளம் ... Read More »
பேருந்தை இயக்க தாமதமானதால் பேருந்து ஓட்டுநருக்கும், நேரம் காப்பாளருக்கும் இடைய கடும் வாக்குவாதம் பயணிகள் அவதி !!
ஓசூர் அடுத்த சூளகிரி பேருந்து நிலையத்தில் பேருந்தை இயக்க சிறிது நிமிடங்கள் தாமதமானதால் பேருந்து ஓட்டுநருக்கும், நேரம் காப்பாளருக்கும் இடைய கடும் வாக்குவாதம் பயணிகள் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பேருந்து நிலையத்தில் ஓசூர் செல்ல வேண்டிய 3 ஆம் எண் கொண்ட அரசு பேருந்து,இரண்டு நிமிடங்களாக புறப்படாததால்,பேருந்து நேரம் காப்பாளர் பேருந்தை சென்று பார்த்ததில் ஓட்டுநர் இல்லாததால்,நடத்துனர் சிறுநீர் கழிக்க சென்றுள்ளார் என பதிலளித்துள்ளார், ஆத்திரமடைந்த நேரம் காப்பாளர் கழிவறையிலிருந்து வந்த ஓட்டுநரிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,ஓட்டுநர்களில் பற்றாக்குறையால் பல ... Read More »
லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: மாவட்டம் முழுவதும் 3ஆயிரம் வாகனங்கள் ஓடாது!!
டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் மாவட்டம் முழுவதும் டிப்பர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த வண்டலூரில் காஞ்சிபுரம் மாவட்ட டிப்பர் லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர்அறிவித்துள்ளனர்.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகிறது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ... Read More »