Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மாவட்டம் | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News | Page 20
Friday , 1 July 2022
Home » மாவட்டம்page 20

மாவட்டம்

தீயணைப்பு துறையினருக்கு மினி மோட்டார் படகு வாங்கி தர வலியுருத்தி மனு மாவட்ட ஆட்சியரிடம் மனு

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம்.இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பள்ளி மாணவி ரக்ஷனா மனு அளிக்க வந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர்,நேற்று மதியம் 3-மணி அளவில் அமராவதி ஆற்றில் குளித்து கொண்டிருந்த மாணவன் சபரீசன் தண்ணீரில் மூழ்கினான்.இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் அமராவதி ஆற்றில் நேற்று இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை. மீண்டும் இன்று காலைமுதல் தேடி வந்தனர்.ஆயினும் ... Read More »

ஓசூர் அருகே மூன்று குழுக்களாக 7 யானைகள் ; கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனசரகத்தில் மூன்று குழுக்களாக ஏழு யானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால், அவற்றை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிக்கின்றனர். மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.கர்நாடக மாநில காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து வெளியேறி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக, ஓசூர் வன பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைகளில், ஏழு மட்டும், மீண்டும் திரும்பி செல்லாமல், ஓசூர் வனப்பக்குதிகுள் தஞ்சம் அடைந்து அருகிலுள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.சானமாவு, போடூர்பள்ளம், பேரண்டப்பள்ளி, செட்டிப்பள்ளி என, இடத்தை மாற்றி, யானைகள் தஞ்சம் ... Read More »

பசுமை வழி சாலை இறுதிகட்ட பணி பாதிக்கப்பட்ட விவசாயிகளை வலுக்கட்டாயமாக இழுத்து சென்ற காவல்துறையினர்

சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை நிலம் கையகப்படுத்தும் பணிக்காக அளவை கல் பதிக்கும் பணி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக மூன்று கட்டமாக கல் பதித்து அளவிடும் பணி நடைபெற்று வருகிறது இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கட்டமடுவு பகுதியைச் சேர்ந்த அருள் மற்றும் ரமேஷ் என்பவரது நிலத்தில் கம்பி முள்வேலி அமைத்து அரசு அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். கடும் எதிர்ப்பால் 5 முறைக்கு மேல் சென்று நிலத்தை அளவீடு செய்யாமல்; அப்பகுதியில் ... Read More »

மறைந்த முன்னாள் விளையாட்டு வீரரின் நினைவையொட்டி மாபெரும் கபடி போட்டி

சென்னை ஆவடி அடுத்த பாலவேட்டில் மறைந்த முன்னாள் விளையாட்டு வீரரின் நினைவையொட்டி மாவட்ட அளவிலான இரண்டு நாள் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. பிரிஸ் டீ.ஜே. கலை நிகழ்ச்சி உரிமையாளர் அபிராஜ் மற்றும் ஆலை ப்ரெண்ட்ஸ் சார்பில் நடைபெற்ற இப்போட்டியை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.மேலும் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரத மாநில இளைஞர் அணி துணை பொது செயலாளர் லயன் பீரீஸ் பன்னீர் கலந்து கொண்டார். சென்னை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டன. நான்கு ... Read More »

அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறந்த சம்பவம் வருவாய்த்துறையினர் விசாரணை

வேலூர்மாவட்டம்,வாணியம்பாடி நியூடவுன் காந்திநகர் பகுதியில் இயங்கி வரும் நகராட்சி முஸ்லீம் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் மதியம் தேசியகொடி அரைக்கம்பத்தில் பறந்துள்ளது.இச்சம்பவம் பொதுமக்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியது.தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடியை இறக்கி எடுத்து சென்றனர்.இந்திய தேசிய கொடி நாட்டில் துக்கம் அனுசரிக்கும் போது தேசிய தலைவர் அல்லது மாநில அளவில் கட்சி பிரமுகர்கள் இறந்தால் மட்டுமே அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் ஆனால் இந்த பள்ளியில் எதற்காக தேசியகொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டனர் என்பதும் இதனை ... Read More »

நெல் விதை மற்றும் உரத்தட்டுப்பாடு அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து இருப்பதால் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் குண்டாறு, கருப்பா நதி, அடவி நயினார் கோவில் நீர்த்தேக்கம் போன்ற அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதே போல் அருகில் உளள அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள தென்மலை நீர்த்தேக்கம் 115.82 அடி கொண்டது. இந்த அணையும் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 132 அடியுள்ள அடவி ... Read More »

வனப்பொருள் சேகரிக்க தடை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியின மக்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கேர்மாளம் வனச்சரகம் மலைப்பகுதியை உள்ளடக்கியதாகும். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் கெத்தேசால், கேர்மாளம், ஜே.ஆர்.எஸ் புரம், செலுமிதொட்டி, கானக்கரை, செலுமிதொட்டி, காடட்டி, கோட்டமாளம், வைத்தியநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் என்பது விவசாயம் மற்றும் வனப்பொருள் சேகரிப்பு முக்கிய தொழிலாகும். வனத்தில் உள்ள தேன், நெல்லிக்காய், கடுக்காய், பூச்சக்காய், சீமார்புல், வேப்பங்கொட்டை, சுண்டைக்காய் உள்ளிட்ட வனப்பொருட்களை சேகரித்து வருமானம் ஈட்டுவதோடு அதன் முலம் கிடைக்கும் வருவாயில் அவர்களது மானாவாரி நிலங்களில் ராகி, மக்காச்சோளம், ... Read More »

குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

  நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே 19 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து உத்தரவிட்டார். இதன்படி பிளாஸ்டிக் தட்டுகள், கிண்ணங்கள், பிளாஸ்டிக் பைகள், ஒரு தடவை உபயோகிக்கும் டம்ளர்கள் தட்டுக்கள் என பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் இதில் அடங்கும். பிளாஸ்டிக் தடையை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மீறி அதை விற்பவர்கள் மீதும் பயன்படுத்துபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்  குன்னூர் பெட் போர்டு பகுதியில் செயல்பட்டு வரும் துணி அங்காடி, பல்பொருள் அங்காடியில் குன்னூர் நகராட்சி ... Read More »

மன்னார்குடியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்ப சேவை சங்கங்கள் கோரிக்கை மனு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் சேவை அமைப்புகள், வர்த்தக சங்கம், ஓய்வூதியர் சங்கம், மூத்த குடிமக்கள் சங்கங்களின் சார்பில் நகரத்தில் உள்ள நீர் நிலைகளுக்குத் தண்ணீர் நிரப்புவது தொடர்பாக மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை, அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர் . அவர்கள் அளித்த மனுவின் விபரம்.காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வருகின்ற நீரை பயன்படுத்தி நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பிக்கொள்ள தமிழக அரசும் அறிவுறுத்தி உள்ளது. மன்னார்குடி நகரத்தின் நீர்நிலைகளுக்கு வடவாறு பாசனத்தின் மூலம் ... Read More »

தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்படும் குளம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் ஆய்வு

கோபிசெட்டிபாளைம் அருகேஉள்ள மூணாம்பள்ளி கீழ்பவானி வாய்கால் அருகில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் புதிதாக அமைக்கப்படும் குளத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகள் என்ற முறையில் ஏரிகுளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர் வாருதல் பசான வாய்கால்கள் புணரமைப்பு செய்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கிராமங்களில் மழைநீர் மற்றும் கசிவு நீர்களை தேக்கி வைக்க வசதியின்றி உள்ள கிராமங்களில் புதிதாக குளங்கள் அல்லது குட்டைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com