Monday , 25 October 2021
Home » மாவட்டம்page 2

மாவட்டம்

காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் ஆனைமுடி அருகே காயத்தால் நடக்க முடியாமல் இருந்த ஆண் குட்டி யானை, இன்று பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த மாதம் 21-ந் தேதியன்று நல்லமுடி பகுதியில் முகாமிட்ட காட்டு யாணை கூட்டத்தில் இருந்த 6 யானைகளில் 4 மட்டும் வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றன. ஒரு தாய் யானையும், குட்டி யானையும் தேயிலை தோட்டத்திலேயே தங்கின. அதை கவனித்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், பின்னங்காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் குட்டியானை மிகவும் சோர்வாக இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து மானாம்பள்ளி வனத்துறைக்கு அவர்கள் தகவல் ... Read More »

விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண புதிய நடைமுறை

கன்னியாகுமரியில் சீசன் காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண படகு போக்குவரத்துக்கு நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்துக் கிடப்பதை தடுக்க டோக்கன் வினியோக முறை அமல்படுத்தப்பட உள்ளது. கன்னியாகுமரியில் வரும் 15ஆம் தேதி சீசன் துவங்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர்கள், பேரூராட்சி மற்றும் சுற்றுலா அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரசாந்த் வடநேரு, வடநாட்டில் ... Read More »

கீழ்பவானி வாய்க்காலில் இன்றிரவு முதல் நீர் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் இன்றிரவு பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுவந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி சத்தியமங்கலம் அருகே மில்மேடு என்ற இடத்தில் வாய்க்காலின் கரை உடைந்தது. இதனால் 5 கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட ... Read More »

சத்தியமங்கலம் அருகே உள்ள உணவகத்தில் திடீர் தீ

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உணவகத்தில் பற்றி எரிந்த தீயை, 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். நகராட்சி வணிகவளாகத்தில் உள்ள ஸ்ரீகண்ணாஸ் புட்ஸ் என்ற உணவகத்தில் இன்று அதிகாலை திடீரென கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்தது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கதவை திறந்தபோது குளிர்சாதனப்பொட்டி மற்றும், மரச்சாமான்களும், உணவுபொருள்களும் எரிந்து கொண்டிருந்தன. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு தீ அணைக்கப்பட்டது. இதில் பல லட்சம் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை ... Read More »

விருதுநகர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை

மதுரை: விருதுநகர் அருகே சின்னவள்ளிக்குளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இன்பமூர்த்தி மற்றும் அவரது மகன் கண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். மனைவி திலகவதி உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More »

திம்பம் மலைப்பாதையில் கரும்பு லாரி பழுதாகி நின்றது – போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதானதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மைசூரிலிருந்து ஆப்பக்கூடலுக்கு வந்த லாரி நடுவழியில் நின்றதால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்து வந்த ஆதனூர் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் பழுது ஏற்பட்டு நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிய லாரிகளை மலைப்பாதையில் அனுமதிக்கக்கூடாது என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். Read More »

தமிழகத்தில் பத்திரிகையாளர் நலவாரியம் ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்படும் -அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் பத்திரிகையாளர் நலவாரியம் ஜனவரி மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மிளகுப்பாறையில் பெரும்பிடுகு முத்தரையர், தியாகராய பாகவதர், ஏ.டி.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அரசு சார்பில் மணி மண்டபம் கட்டவுள்ள இடத்தை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் வலுவோடு வைத்திருப்பதாக ... Read More »

பவானி சாகர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியதால் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணை தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டம் மற்றும் வடகேரளாவின் சில பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த மாதம் நீர்மட்டம் 102 அடியை எட்டிய நிலையில் தற்போது மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் ... Read More »

போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன்

தந்தையின் ஆசை நிறைவேறி இருக்கிறது. போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன் கமல்ஹாசன் பரமக்குடி: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரமக்குடியில் இன்று தனது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைத்து கூறியதாவது:- நான் சினிமா துறைக்கு வந்தபோது எனது தந்தை நீ மாலைநேர கல்லூரியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆகலாம் என கூறினார். அதற்கு நான் முதலில் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்ய வேண்டும். அதன் பிறகுதான் மற்றதெல்லாம் என்றேன். ... Read More »

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவானது விநாடிக்கு 16,600 கன அடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த 15 நாட்களுக்கு முன்னர் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது மழை குறைந்ததன் காரணமாக அந்த அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,205 கன அடியாகக் குறைந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 5,600 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திறக்கப்படும் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com