தருமபுரி அருகே சாலையில் வந்த தனியார் மகளிர் கல்லூரி வாகனத்தை வழிமறித்து மாணவிகளை துன்பறுத்திய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடத்தூர் C3 காவல் நிலையத்தில் மாணவிகள் புகார். தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே அய்யம்பட்டி சாலையில் தனியார் மகளிர் கல்லூரி வாகனம் வந்து கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் குடிபோதையில் நின்றுகொணடிருந்த சிங்காரவேலன் என்கிற வாலிபர், கல்லூரி வாகனத்தில் இருந்த மாணவிகளை கேலி கிண்டல் செய்துள்ளார். இதையறிந்த மாணவிகள் பேருந்து கண்ணாடிகளை இழுத்து மூடியுள்ளனர்.அய்யம்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து காவேரிபுரத்தை நோக்கி சென்ற கல்லூரி வாகனத்தை இரு ... Read More »
மாவட்டம்
தனியார் மெட்ரிக் பள்ளி பேருந்து மற்றும் அரசுபேருந்து மோதி விபத்து
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை அருகே தூத்துக்குடி – மதுரை புறவழிசாலையில் செட்டிபட்டி விலக்கில் தனியார் மெட்ரிக் பள்ளி பேருந்து மற்றும் அரசுபேருந்து மோதி விபத்து 8 மாணவர்கள் உட்பட 12 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். திருச்சுழி அருகில் உள்ள மாங்குளத்தில் மினர்வா (தனியார்) மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, மல்லாங்கிணறு, பந்தல்குடி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி மாணவ மாணவிகளுக்கென பேருந்து வசதிக்காக பள்ளி நிர்வாகம் தனியாக ... Read More »
குற்றாலத்தில் பராமரிப்பின்றி காணப்படும் அரசு தங்கும் விடுதிகள்
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்து அமைந்துள்ளது குற்றாலம் . இங்கு ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவ காலங்களாகும். இந்த பருவ நிலையில் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, குளிக்க அனுமதியில்லாத செண்பகாதேவி அருவி, தேனருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த பருவ நிலையை அனுபவிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சகணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த ஆண்டிற்கான பருவ நிலை கடந்த மே மாத இறுதியில் தொடங்கியது. தொடர்ந்து ... Read More »
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க மகளீர் மன்றத்தினர் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் கீழச்செவல்பட்டி அருகே உள்ளது அச்சரம்பட்டி. இங்கு வசித்து வருபவர் அழகு. இவரது 17 வயது மகள்தேவி. இவர் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்று திறனாளி. கடந்த 10 ம் தேதி தேவியின் தந்தையும், தாயும் கூலி வேளைக்கு சென்று விட்ட நிலையில் தனியா இருந்த தேவியை அருகில் வசிக்கும் பெயின்டர் மாணிக்கம் (27) பாலியல் வன்புனர்வு செய்து, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு அருகில் உள்ள புதரில் சிறுமியில் உடலை போட்டு விட்டு தப்பி சென்றுவிட்டார். ... Read More »
கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் நகராட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப கூடுதல் துப்புரவு பணியாளர்களை அதிகப்படுத்த வேண்டும், காலி இடங்களை பூர்த்தி செய்ய வேண்டும், கான்ராக்ட் மற்றும் தின கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பாதாள சாக்கடை தூய்மை பணிக்கு கேரளாவை போல் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளன்றே பணிகொடையை முழுவதுமாக வழங்க வேண்டும்.வீடுகளுக்கு சென்று கழிவுகளை சுமந்து செல்லும் ... Read More »
சீர்காழியில் அ.தி.மு.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொலை
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவர் அ.தி.மு.க. ஒன்றிய மாணவரணி செயலாளராக உள்ளார்., பிரபல காண்டட்ராக்டர் மற்றும் தொழிலதிபரான இவர் இன்று காலை தனது காரில் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிடாரி வடக்கு வீதி ;பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ரமேஷ்பாபு வந்த காரின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியுள்ளனர். அப்போது காரில் இருந்து இறங்கி தப்ப முயன்ற ரமேஷ்பாபுவை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டி ... Read More »
மண்டிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை,82 ஆயிரம் பணம் கொள்ளை.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே உள்ள சித்தகுடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசந்திரன் (61) இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மண்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருக்கடையூருக்கு தனது அறுபதாம் கல்யாணத்திற்காக சென்றார். இந்நிலையில் வீட்டு வேலைக்காரப் பெண் வீட்டிற்கு சென்று பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து இதுபற்றி ஜெயச்சந்திரனுக்கு தகவல் அளித்தார்.இன்று மாலை ஊர் திரும்பிய அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது 3 அறைகளில் இருந்த பிரோ ... Read More »
ஆசிரியை பணிமாற்றம் செய்யபபட்டதை கண்டித்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள சொக்கநாதப்பட்டியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றி வந்த மேரி ஜெயந்தி என்ற ஆசிரியை இந்த கல்வியாண்டில் அருகில் உள்ள தேனூர் பள்ளிக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அந்த ஆசிரியை பணிமாற்றம் செய்யப்பட்டதால் பெற்றோர் பலரும் தங்களின் மாணவ, மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினர். இருப்பினும் மேரி ஜெயந்தி ஆசிரியை மீண்டும் சொக்கநாதப்பட்டிக்கு மாற்றிட வேண்டும் என்று அந்தபகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் ... Read More »
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டிகள் பண்டல்கள் தேக்கமடைந்துள்ளன
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, கயத்தார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி,ஏழாயிரம்பண்ணை, நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி தொழில் நடைபெற்று வருகிறது. இதனை நம்பி நேரிடையாக 4 லட்சம் தொழிலாளர்களும், மறைமுகாக 2லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும்300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 25 முழு இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 2000க்கும் மேற்பட்ட சிறு,குறுதொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து பெரும்பாலும் வடமாநிலங்கள் ... Read More »
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்துக்கொண்டதால் நிலத்தையும் பறித்து விட்டு, அந்த குடும்பத்தையே ஊரை விட்டு தள்ளி வைத்ததால், மனம் உடைந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரியை அடுத்து கந்திகுப்பம் காவல் நிலையத்திற்குட்பட்ட சூரான்கொட்டாய் கிராமத்தை சேர்தவர் அசோகன். இவரது மகன் சிவகுமார், கடந்த 2011-ம் ஆண்டு மாதேப்மள்ளி கிராமத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த சோனியா என்ற பெண்னை காதல் திருமணம் செய்து கொண்டார் இதனால் ஆத்திரமடைந்த ஊர் ... Read More »