Tuesday , 30 November 2021
Home » மாவட்டம்page 133

மாவட்டம்

சாலைப் பணிகள் நேர்த்தியாக நடைபெறுகின்றனவா? அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் அரி திடீர் ஆய்வு

மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறும் சாலைப் பணிகள் நேர்த்தியாக நடைபெறுகின்றனவா என்று அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் அரி திடீர் ஆய்வு செய்தார். அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி தனது தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு சாலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தப் பணிகள் ஒழுங்கான முறையில் நடைபெறுகிறதா என அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அரக்கோணம் நகராட்சியில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதி ... Read More »

அமெரிக்காவில் தமிழினம் காக்க, தமிழ் மொழியை வளர்க்க குடும்பபெண்கள் பள்ளிகள் நடத்தி பாடுபடுகின்றனர்

அமெரிக்காவில் தமிழினம் காக்க, தமிழ் மொழியை வளர்க்க குடும்பபெண்கள் பள்ளிகள் நடத்தி பாடுபடுகின்றனர் என்று கும்பகோணத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் தெரிவித்தார். கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவில் நடிகரும்,பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் ஞானசம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார். அப்போது, தமிழ் மொழியை வளர்க்க நாம் பாடுபடவேண்டும் என்றும்,நாம் நம் குழந்தைகள் ஆங்கிலம் பேசுவதை பார்த்து மகிழ்கிறோம் ஆனால் அமெரிக்காவில் தமிழ்மொழியை அங்குள்ள தமிழர்களின் குழந்தைகள் மறந்துகொண்டே வருகின்றனர்.தமிழ்மொழியை மறக்ககூடாது என்பதற்காக அங்குள்ள தமிழ் குடும்ப பெண்கள் ஒன்றிணைந்து தமிழ்ப்பள்ளிகளை நடத்தி வருகின்றனர் ... Read More »

வாணியம்பாடி அருகே பள்ளிக்கு அருகே மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பள்ளிக்கு அருகே மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அருகேயுள்ள பெத்தூரைச் சேர்ந்த அனுமுத்து மகள் அர்ச்சனா. இவர் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர் மதிய உணவு இடைவேளையில், பள்ளி வளாகத்துக்கு வெளியே உள்ள பேரூராட்சியின் ஆழ்துளை நீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார். அப்போது மின் இயந்திரம் அமைக்கப்பட்டிருந்த குழாய் மீது அவர் அமர்ந்தபோது, மின்சாரம் பாய்ந்தது. அவர் அலறி துடித்து ... Read More »

இலங்கை மீனவர்களால் சிறை பிடிக்கப்பபட்ட தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை

இலங்கை மீனவர்களால் சிறை பிடிக்கப்பபட்ட தமிழக மீனவர்கள் 7 பேரை விடுவித்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 2ம் தேதி பாம்பனைச் சேர்ந்த தர்மதுரை என்பவருக்கு சொந்தமான படகில் ஏழு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் . ஆறு தினங்கள் கடலில் தங்கி மீன்; பிடித்து கரை திரும்புவது வழக்கம் . கோடிக்கரையிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எட்டு படகில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் இருபது பேர் ... Read More »

கொடைக்கானலில் உள்ள பூம்பாறை அரசு மதுபான கடையில் 86 ஆயிரம் ரூபாய் கொள்ளை

கொடைக்கானலில் உள்ள பூம்பாறை அரசு மதுபான கடையில் 86 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து சென்ற 2 மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மேல்மலை கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் ஜன்னல் கிராதியை உடைத்து தூங்கிக் கொண்டு இருந்த அரசு ஊழியரை கத்தியால் மிரட்டி ரூபாய் 86 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்தனர். அரசு ஊழியர் யாரிடமும் தகவல் கூறமுடியாதபடி அவருடைய கைப்பேசியையும் எடுத்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த ... Read More »

அறந்தாங்கி அருகே, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5-பேர் படுகாயம்

அறந்தாங்கி அருகே, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5-பேர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்;டம் அறந்தாங்கி அருகே, குரும்பூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்பள்ளி மாலை பள்ளி வகுப்பு முடிந்ததும் பள்ளி மாணவர்களை அவர்களின் வீடுகளுக்கு வாகனத்தின் மூலம் அனுப்பி வைத்தனர். அப்போது. புதுக்கோட்டை சாலையில் உள்ள குரும்பூர் என்ற இடத்தில் பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த 5-பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்யப்பட்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ... Read More »

தர்மபுரி மாவட்டத்தில் திடீர் கன மழை! மின்னல் தாக்கி 4 பேர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் திடீரென மழை பெய்ததால் வௌ;வேறு இடங்களில் மின்னல் தாக்கி 4 பேர் பரிதபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கரகூர் அருகே உள்ள திருமல்வாடி கிராமத்தில் உள்ள ஏரியில் ஊரக வேலை உறுதிதிட்ட பணி நடைபெற்றது. அப்போது; நேற்று மாலை திடீரென அந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. இதனால் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏரி அருகே உள்ள ஓம்காளி அம்மன் கோவிலின் உள்பகுதியில் மழைக்காக ஒதுங்கி நின்றனர். அப்போது கோவில் உள்ள பகுதியில் திடீரென ... Read More »

சேலம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் மோதல்!

சேலம் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் மோதல் அபாயத்தைத் தடுக்கும் விதமாக, 21 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் திருமலைகிரி தோப்புக்காட்டில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீ சைலாம்பிகை சமேத சைலகிரீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இதையடுத்து, கோயிலைப் புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு மற்றொரு சமுதாயத்தினர் வரக்கூடாது எனக் கோயில் நிர்வாகத்தினர் கூறியதால், இரு ... Read More »

தூத்துக்குடியில் அரசு வேலை வழங்கக்கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரி தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தூத்துக்குடியில் அரசு வேலை வழங்கக்கோரி பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரி தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரி ஆனந்த். கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட தனக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்பார்வை குறைபாடு ஏற்பட்டது. இருந்தும் தற்போது, படித்து தற்போது, முதுநிலை பட்டம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனது குடும்ப சூழ்நிலை ... Read More »

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவுப் பேருந்து பணிமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாறோஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாதவன், சத்யா, அண்ணாத்துரை, நகரச் செயலர் மீனாட்சி சுந்தரம், மாவட்டச் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com