Tuesday , 30 November 2021
Home » மாவட்டம்page 132

மாவட்டம்

வாணியம்பாடி அருகே, மேம்பாலத்தின் தடுப்பு சுவற்றின் மீது கார்  மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி  

வாணியம்பாடி அருகே, மேம்பாலத்தின் தடுப்பு சுவற்றின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.4-பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களுர் பகுதியை சேர்ந்த நசீர் என்பவர் தனது நண்பர்கள் 4-பேருடன், சுங்கவாச்சத்திரத்தில் நடைபெறும் நிகழச்சி ஒன்றில் கலந்து கொள்ள கார் ஒன்றில் பயணம் செய்தனர். காரை நசீர் ஓட்டி வந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தின் மீது கார் வந்தபோது, திடீரென டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மேம்பாலத்தின் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் ... Read More »

விபத்தில் பலியான தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மேச்சேரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

விபத்தில் பலியான தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மேச்சேரி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் காற்றாலை மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக சென்று இருந்தார். அங்கு டிராக்டரில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் ஜெகநாதன் உயிரிழந்தார். அவரது சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், மின்கோபுரம் அமைக்கும் பணி ஒப்பந்ததாரர் தலைமறைவானார். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மேச்சேரி ... Read More »

விவசாயிகள் குறை தீர்க்கும் முகாமில் ஆட்சியர் முன்பு மனு கொடுக்க வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு

விவசாயிகள் குறை தீர்க்கும் முகாமில் ஆட்சியர் முன்பு மனு கொடுக்க வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசி அடுத்துள்ள வடகரையில் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கு தென்காசி, செங்கோட்டை, வடகரை, கடையநல்லூர், இடைகால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகை உட்பட பல்வேறு கோரிக்கை ... Read More »

நாகர்கோவில் ஈத்தாமொழி அருகே கந்துவட்டி கொடுமையால், வலை கம்பெனி உரிமையாளர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை

நாகர்கோவில் ஈத்தாமொழி அருகே கந்துவட்டி கொடுமையால், வலை கம்பெனி உரிமையாளர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி காற்றாடிதட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் அந்த பகுதியில் வலை கம்பெனி நடத்தி வந்தார். வலை கம்பெனியில் போதிய வருமானம் கிடைக்காததால் சுபாஷ் சந்திரபோஸ் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியாததால்; தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாபி தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த ... Read More »

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர விடுதிகள், மற்றும் ஹோட்டல்களில் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர விடுதிகள், மற்றும் ஹோட்டல்களில் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவின்பேரில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர விடுதிகள், மற்றும் ஹோட்டல்களில், திண்டுக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினர் மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, சுற்றுலாப் பயணிகளுக்கு சுத்தமான உணவு பரிமாற வேண்டும், ஐ.எஸ்.ஐ இல்லாத குடிநீர் வழங்கக் கூடாது, விலைப்பட்டியல் வைக்க வேண்டும், என எச்சரித்தனர். சோதனையில், பிளாஸ்டிக் பைகள், தரமற்ற டீத்தூள் போன்றவற்றை கைப்பற்றினர். ... Read More »

தென்காசி அடுத்த ஆலங்குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் பலி

நெல்லை மாவட்டம் தென்காசி அடுத்த ஆலங்குளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆலங்குளத்தில் இருந்து குருவன்கோட்டை, நெட்டூர் வழியாக திருநெல்வேலி செல்லும் அரசு பேருந்து நெட்டூர் ஆற்றுபாலம் அருகே வரும் போது நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பன்குளம் பகுதியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவன் சிவரத்தினம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிழந்தார். பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் ... Read More »

தமிழகத்தில் இலவச கல்வி, இலவச மருத்துவம் போன்ற, செயல்களுக்காக நாம் தமிழர் கட்சி பாடுபடும்!

தமிழகத்தில் இலவச கல்வி இலவச மருத்துவம் போன்ற செயல்களுக்காக நாம் தமிழர் கட்சி பாடுபடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தருமபுரியில் நாம் தமிழர் கட்சியின் தமிழ் இன எழுச்சி மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைறெ;றது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட திராவிட கட்சிகளால் ஊழல், லஞ்சம் ஆகியவைதான் வழர்ந்துள்ளன. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை தமிழ்நாட்டில் அனைத்து ... Read More »

குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவ, மாணவிகள் மனு

குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவ, மாணவிகள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, பருவாச்சி பாலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், மாவட்ட ஆட்சியரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் பருவாச்சியில் இருந்து தளவாய்பேட்டை செல்லும் சாலையில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் மதுக்கடை திறக்க தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்த சாலையில் பேருந்து வசதி இல்லாததால் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் நடந்தே ... Read More »

செங்குன்றம் புழல் சிறையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு

செங்குன்றம் புழல் சிறையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளைச் சேர்ந்த 72 கைதிகள் தேர்வு எழுத புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஆங்கிலம் முதல் தாள் தேர்வை 52 பேர் எழுதினர். 15 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலர் சபீதா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், பள்ளிகல்வித் துறையின் ... Read More »

ஆம்னி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து! 3 பேர் பலி

ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஆம்னி வேனும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே அந்தியூரைச் சேர்ந்தவர் பாலமுருகன் . இவர் ஆம்னி வேனை வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி ராதாமணி , மகள்கள் ஹரிப்ரியா , ஜெய்ஸ்ரீ ஆகியோர் ஆம்னி வேனில் அந்தியூரில் இருந்து கோபி வழியாக திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர். கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜூனைதீன் , இவரது மனைவி தாஜூன் நிஷா , ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com