Tuesday , 30 November 2021
Home » மாவட்டம்page 131

மாவட்டம்

கொடைக்கானலில், நடுரோட்டில் மாமியாரை வெட்டிக்கொலை செய்த கார் டிரைவர்

கொடைக்கானலில், நடுரோட்டில் மாமியாரை வெட்டிக்கொலை செய்த கார் டிரைவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வில்பட்டி அட்டுவம்பட்டியை சேர்ந்தவர் அன்பு. கொடைக்கானல் பர்ன்சில்ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஷீலா . இவர்களுடைய மகள் எஸ்தர் கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கார் டிரைவர் அன்பும், எஸ்தரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, முன்றரை வயதில் சவுத்ஜென்னியா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி ... Read More »

மதவாத சக்திகளால், மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன

மதவாத சக்திகளால், மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று மதச் சிறுபான்மையோர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் மதவாத சக்திகளால், மதச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று மதச் சிறுபான்மையோர் கூட்டமைப்புமைப்பின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு அமைப்பின் செயலர் அந்தோணிராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொல்கத்தாவில் சேவையில் ஈடுபட்டு வந்த 71 வயதான கன்னியாஸ்திரி கூட்டு பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார். இதேபோல் ராஜஸ்தானில் தேவாலயம் ஒன்று சேதப்படுத்தப்பட்டு அதில் இருந்த பாதிரியார் தாக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், ஏழைகளின் உணவாக மாட்டிறைச்சி உள்ளது. ... Read More »

நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கண்ணகி சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம்

நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கண்ணகி சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அவைத் தலைவர் உடையவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய முன்னாள் இணை அமைச்சர் காந்திசெல்வன் பேசும் போது, மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 20-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பெருமளவில்பங்கேற்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கண்ணகி ... Read More »

போலியான எண்ணைப் பயன்படுத்தி இயக்கிய மணல் லாரியை நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் பறிமுதல்

போலியான எண்ணைப் பயன்படுத்தி இயக்கிய மணல் லாரியை நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருப்பண்ணன் தலைமையிலான அலுவலர்கள் முதலைப்பட்டி அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெஞ்சாலையில் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்சி மாவட்டம், தொட்டியத்திலிருந்து சேலம் நோக்கிச் சென்ற மணல் லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது லாரியின் ஆவணங்கள் போலியானவை என்பதுடன், லாரியின் எண்ணும் தவறாக இருந்தது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநரிடம் ... Read More »

கரூரில் விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்ட ஆட்சர்ய அலுவலகம் அருகே, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அகரமுத்து தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்தும் மத்திய அரசின் அவசர சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நூறு நாள் வேலை திட்டத்தை 200-நாட்களாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். இதேபோல் அரியலூரில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி,விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More »

திண்டிவனம் அருகே சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

திண்டிவனம் அருகே சிப்காட் தொழில் பூங்காவுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கொள்ளார், பெலாகுப்பம், வெண்மணியாத்தூர் ஆகிய பகுதிகளில் 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக அக் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகளை வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர். விளைநிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், விளை நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக் கோரி கொள்ளார், பெலாக்குப்பம், வெண்மாணியாத்தூர் ஆகிய 3 கிராமங்களைச் ... Read More »

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தகுந்த நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும்

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் தகுந்த நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும் என்று காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா தெரிவித்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சிறிது நாட்களுக்கு முன்பு மசூதிகள் குறித்தும் தேவாலயங்கள் குறித்தும் சுப்ரமணியசாமி கூறிய கருத்து சிறுபான்மையினர் மத்தியில் வருத்தம் மற்றும் அச்சத்தை ஏற்ப்படுத்தும் வார்த்தை. மற்க்கு வங்காளத்தில் 72 வயதுடைய கன்னியஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்தது சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பு இன்மை ... Read More »

அறந்தாங்கி கட்டுமாவடிச்சாலையில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் ரூபய் 50-ஆயிரம் கொள்ளை

அறந்தாங்கி கட்டுமாவடிச்சாலையில் உள்ள ஆடிட்டர் அலுவலகத்தில் ரூபய் 50-ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அறந்தாங்கி கட்டுமாவடிச்சாலையில், தங்கதுரை என்பவர் ஆடிட்டர் அலுவலகம் நடத்தி வருகிறார். இவர், அறந்தாங்கியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் வரவு, செலவு கணக்குகளை தணிக்கை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அலுவலகத்தில் உள்ள லாக்கரில் ரூபாய் 50-ஆயிரத்தை வைத்துவிட்டு அலுவலகத்தை பூட்டிச்சென்றுள்ளார். இன்று காலை அலுவலகத்தை திறந்து பார்த்தபோது பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அறந்தாங்கி காவல்நிலையத்திற்கு புகார் அளித்தார்;. புகாரின்பேரில்; ... Read More »

காஞ்சிபுரத்தில் குடிசை வீட்டின் அருகே மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு, சிகிரேட்டை அணைக்காமல் வீட்டின் மீது வீசியதால், குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பல்

காஞ்சிபுரத்தில் குடிசை வீட்டின் அருகே மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு, சிகிரேட்டை அணைக்காமல் வீட்டின் மீது வீசியதால், குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில், சரோஜா என்பவர் குடிசை வீடு அமைத்து வசித்து வருகிறார். இன்று மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு, சிகிரேட்டை அணைக்காமல் வீட்டின் மீது வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனால் குடிசை வீடு தீப்பற்றியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் ... Read More »

சாலை விபத்தில் தலையில் அடிபட்டு மண்டையோடு சிதைந்த குழந்தைக்கு, கோவை மெடிக்கல் சென்ட்டர் மருத்துவமனை மருத்துவர்கள் உயிர் பிழைக்க வைத்து சாதனை

சாலை விபத்தில் தலையில் அடிபட்டு மண்டையோடு சிதைந்த குழந்தைக்கு, கோவை மெடிக்கல் சென்ட்டர் மருத்துவமனை மருத்துவர்கள் உயிர் பிழைக்க வைத்து சாதனை படைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் காளிங்கராயன்பாளையத்தை சேர்ந்த சக்திபிரகாஷின் மகள் தயாஸ்ரீ, சாலை விபத்தில் தலையில் அடிபட்டு மண்டையோடு சிதைந்து சுயநினைவிழந்த நிலையில், அவரது பெற்றோர் கோவை மெடிக்கல் சென்ட்டர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தாயாஸ்ரீ என்ற குழந்தைக்கு, குழந்தை நல மருத்துவர் அருண்குமார்,நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பிரபு ஆகியோர் சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது, சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பீக் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com