Tuesday , 30 November 2021
Home » மாவட்டம்page 130

மாவட்டம்

மணப்பாறையில் சாக்கடை குடிநீர் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மணப்பாறையில் சாக்கடை குடிநீர் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட தொகுதிகளில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்றும், பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும் என்றும வலியுறுத்தப்பட்டது. இதில் திருச்சி மாவட்ட விவசாய சங்க செயலாளர் சிதம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். Read More »

ஈரோடு அருகே வெண்டிப்பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளை

ஈரோடு அருகே வெண்டிப்பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு அருகே வெண்டிப்பாளையம் ஜெய்பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரபாகர் . இவர், ஈரோடு கடை வீதியில் பள்ளி பேக் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி பிரவீனா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டு, பிரவீனா சென்றுவிட்டார் தனது மகனை, பள்ளிக்கு அனுப்பிவிட்டு கடைக்குச் சென்ற பிரபாகர், மதிய ... Read More »

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, தேயிலை அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, தனியாருக்குச்சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் விஜயகுமாரி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர், தனக்காக ஒதுக்கப்பட்ட கலர் செட்டர் எனும் இயந்திரத்தை இயக்கினார். அப்போது, இயந்திரம் இயங்காததால், மீண்டும் அதனை இயக்கினார். அதனைத் தொடர்ந்து இயந்திரம் இயங்கத் தொடங்கியதும் அதன் அருகில் சென்று தேயிலை பணிகளை மேற்கொண்டார். அப்போது, அவரது சேலை இயந்திரத்தில் சிக்கி உள்ளே இழுத்துச்செல்லப்பட்டார். ... Read More »

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் சிலை அவமதிப்பை கண்டித்து பாவூர்சத்திரத்தில் நாடார் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் சிலை அவமதிப்பை கண்டித்து பாவூர்சத்திரத்தில் நாடார் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காமராஜ் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தென் மாவட்டங்களில் அமைதி திரும்ப வலியறுத்தியும் தெஷ்ண மாற நாடார் சங்கம் மற்றும் அனைத்து நாடார் அமைப்புகளின் சார்பில் நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் பேரூந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக வந்து சார் பதிவாளர் அலுவலகம் அருகே ... Read More »

ஸ்ரீவில்லிப்புத்தூரில் சமையல் செய்யாத காரணத்தால், கணவனே குடிபோதையில் மனைவியை வெட்டி கொலை

ஸ்ரீவில்லிப்புத்தூரில் சமையல் செய்யாத காரணத்தால், கணவனே குடிபோதையில் மனைவியை வெட்டி கொலை செய்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு அகத்தீஸ்வரன் என்ற மகன் உள்ளார். கணேசன் இராஜபாளையத்தில் காய்-கறி கடை ஒன்றில் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார்.குடிபழக்கத்திற்கு அடிமையான கணேசன் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவியிடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு குடிபோதையில் ... Read More »

அரக்கோணத்தில் அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 14 செம்மர கட்டைகள் காவல்துறையினர் பறிமுதல்

அரக்கோணத்தில் அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்த 14 செம்மர கட்டைகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள கெடவாரி கண்டிகை விவசாய நிலத்தில் மர்மநபர்கள் சிலர் வாகனத்தில் இருந்து செம்மர கட்டைகளை இறக்குவதாக அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து ஆய்வாளர் துரைபாண்டியன்,துணை ஆய்வாளர்கள் சீனிவாசன் ,மூர்த்தி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று சோதனையிட்டனர். சோதனையில் முட்புதாரில் மறைத்து வைத்திருந்த 14 செம்மர கட்டைகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் இருக்கும் ... Read More »

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் – விஜயா தம்பதியரின் 20ம் ஆண்டு மண விழா நாள்

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் – விஜயா தம்பதியரின் 20ம் ஆண்டு மண விழா நாள் நிகழ்ச்சியில் தமி;ழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனர் மறைந்த டி.எஸ். ரவிந்திரதாசின் மகனும், தமி;ழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான டி.எஸ்.ஆர் சுபாஷ்- விஜயா தம்பதியினரின் 20ம் ஆண்டு மன விழா நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தமி;ழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினார். ... Read More »

பரமக்குடி அருகே தனியார் பேருந்தும், வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் 5-பேர் சம்பவ இடத்திலேயே பலி

பரமக்குடி அருகே தனியார் பேருந்தும், வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் 5-பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இராமநாதபுரத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பரமக்குடிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து கீழகோட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த சரக்கு வேண் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த கௌசல்யா, லட்சுமி, வினோதினி முருகன் மற்றும் வேன் ஓட்டுனர் முகமதுஅப்துல் ஆகிய 5-பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தனியார் பேருந்தில் பயணம் செய்த 20-பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். ... Read More »

ஊடகங்கள் மற்றும் செய்தியாளாகள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதலை கண்டித்த அனைத்து கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஊடகங்கள் மற்றும் செய்தியாளாகள் மீது நடைபெற்று வரும் தொடர் தாக்குதலை கண்டித்த அனைத்து கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் தனியார் தொலைக்காட்சி மற்றும் செய்தியாளர்,ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்திய இந்து துவா அமைப்புகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,தொடர்ந்து ஊடகங்கள் மீதும்,செய்தியாளர்கள் மீதம் நடைபெற்று வரும் தாக்குதல்களையும்,அச்சுறுத்தல்களையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ... Read More »

ஆவடி அருகே வரதச்சனை கொடுமையால் இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு

ஆவடி அருகே வரதச்சனை கொடுமையால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் ஜான்சன். இவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.இதனிடையே வீட்டில் தனியாக இருக்கும் பொழுது விஜயலட்சுமி மர்மமான முறையில் தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அடிக்கடி கணவர் வீட்டில் வரதச்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த நிலையில் விஜயலட்சுமியின் மரணம் அவருடையே உறவினர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com