Tuesday , 30 November 2021
Home » மாவட்டம்page 120

மாவட்டம்

சாலையோர கிணற்றில் இரு சக்கர வாகனம் தவறி விழுந்து விபத்து

கரூர் அருகே, சாலையோர கிணற்றில் இரு சக்கர வாகனம் தவறி விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கரூர் மாவட்டம் காணியானம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரும், இவரது உறவினர் தமிழ்செல்வன் என்பவரும் நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த கிணற்றில் அவர்கள் தவறி விழுந்தனர். இரவு நேரம் என்பதால், இருவரும் அபாய குரல் எழுப்பியும் யாருக்கும் கேட்கவில்லை. இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் அவர்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் காவல்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் ... Read More »

மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்த நபரை அரிவளால் வெட்டிய சகோதரர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியாக இருந்த மனவளர்ச்சி குன்றிய, வாய்பேச இயலாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபரை அரிவளால் வெட்டிய சகோதரரை போலீஸார் தேடி வருகின்றனர். சாத்தூர் அருகே உள்ள அன்பின்நகரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரின் 30 வயது மகள், கடந்த 29 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த, அதே ஊரைச் சேர்ந்த பாக்கியராஜ் (25) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதுபற்றி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ... Read More »

தஞ்சையில் எடை குறைவான அத்தியாவசிய பொருட்கள் கொடுப்பதாக கூறி, நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் எடை குறைவான அத்தியாவசிய பொருட்கள் கொடுப்பதாக கூறி, நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை ரயி;லடியில் தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எடை குறைவான பொருட்களை கொடுப்பதற்கும், திடீரென ஆய்வு செய்து மூன்று மடங்கு அபராதம் விதிப்பதால், நியாயவிலை கடை பணியாளர்கள் மனவுளச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இதில் அரசு பணியாளர் மகாசம்மேளன பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், நியாயவிலை கடை பணியாளர் சங்க மாவட்ட ... Read More »

மேகதாது பிரச்சினையில் மத்திய அரசு இரு மாநில அரசுகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

மேகதாது பிரச்சினையில் மத்திய அரசு இரு மாநில அரசுகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் தெரிவித்தார். நீலகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆந்திராவில் 20-தமிழர்களை சுட்டுகொன்ற காவல்துறையினர் மீது நீதி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேகதாது பிரச்சினையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதை தவிர்த்து இரு மாநில அரசுகளையும் அழைத்து ... Read More »

திட்டக்குடி அருகே, டாட்டா வாகனம் மீது, லாரி மோதியதில் 4-பேர் பரிதாபமாக பலி

திட்டக்குடி அருகே, டாட்டா வாகனம் மீது, லாரி மோதியதில் 4-பேர் பரிதாபமாக பலி உயிரிழந்தனர். பெரம்பலூர் மாவட்டம் தம்பை கிராமத்தை சேர்ந்த சக்திவேல், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளனர். திரும்பி வரும்போது, திட்டக்குடி அருகே, எடைச்சிறுவாய் பகுதியில் அவர்கள் வந்த டாட்டா வாகனத்தின் மீது, லாரி மோதியது. இதில் சக்திவேலுவின் மனைவி கல்பனா, உறவினர்கள் அன்னக்கிளி, மின்னல்கொடி, தெய்வானை ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். ... Read More »

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2 குழந்தைகளுடன், தாய் தீக்குளிக்க முயற்சி

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2 குழந்தைகளுடன், தாய் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சேத்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகமணி. இவரது மனைவி கனி இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் லோகமணி, கனியிடம் அடிக்கடி அவரது பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கிவா என்று கூறி துன்புறுத்தி வந்துள்ளார். அதேபோல், வேரொரு பெண்ணுடனும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதையறிந்து மனமுடைந்த கனி, தனது 2 குழந்தைகளுடன் அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ... Read More »

குமராபாளையம் – பள்ளிபாளையம் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை

குமராபாளையம் – பள்ளிபாளையம் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மலப்பாளையம் நத்தமேட்டைச் சேர்ந்தவர் ராஜா. இவரது உறவினர் பெருமாள். தேங்காய் வியாபாரி. இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். அண்மையில் இவர்களது வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு 33 பவுன் நகைகள் திருட்டுப் போனது. இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் பள்ளிபாளையத்தில் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றி வந்த 3 பேரை காவல்துறையினர் ... Read More »

அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் வீசப்பட்ட பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை காவல்துறையினர் மீட்டு விசாரணை

அச்சரப்பாக்கம் அருகே கிணற்றில் வீசப்பட்ட பிறந்து 3 நாட்களே ஆன குழந்தையை காவல்துறையினர் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்து உள்ளது கடமலைபுத்தூர். இங்குள்ள விவசாய கிணற்றில் குழந்தையின் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கும், அச்சரப்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கிணற்றில் கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை பிறந்து 3 நாட்களே ஆகியிருந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து ... Read More »

மத்திய அரசு விவசாய பயிர் கடன்களுக்கு 11-சதவீத வட்டி வசூலிக்க உத்தரவிட்டதை ரத்து செய்து வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்

மத்திய அரசு விவசாய பயிர் கடன்களுக்கு 11-சதவீத வட்டி வசூலிக்க உத்தரவிட்டதை ரத்து செய்து வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில், மத்திய அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறும் பயிர் மற்றும் நகை கடன்களுக்கு வங்கிகள் 11-சதவீத வட்டி வசூல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இதனை ... Read More »

தென்காசியை அடுத்த குற்றாலத்தில் துப்புரவு தொழிலாளி தாக்கப்பட்டதை கண்டித்து நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வேலை நிறுத்தம்

தென்காசியை அடுத்த குற்றாலத்தில் துப்புரவு தொழிலாளி தாக்கப்பட்டதை கண்டித்து நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் த்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில், துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது, குற்றாலம் அருவி பகுதியில் இசக்கி என்ற துப்புரவு தொழிலாளியை தாக்கிய சரவணன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com