Tuesday , 30 November 2021
Home » மாவட்டம்page 110

மாவட்டம்

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கத்தியால் குத்திய பணியாளர், விசாரணைகள் ஆரம்பம்

விருதுநகர் அருகே டோல்கேட் கட்டணம் செலுத்த மறுத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கத்தியால் குத்திய பணியாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சாத்தூர் அருகே சிவந்திப்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி(35). இவர் நெடுஞ்சாலைத்துறையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை விருதுநகர்-சாத்தூர் இடையே உள்ள டோல்கேட் வழியாக செவ்வாய்கிழமை நள்ளிரவில் ஓட்டிச் சென்றாராம். அப்போது, டோல்கேட் பணியாளர்கள் கட்டணம் செலுத்த கூறியதற்கு மறுத்துள்ளார். இதையடுத்து, இவருக்கும் டோல்கேட் பணியாளர் வெள்ளைச்சாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வெள்ளைச்சாமி, பால்பாண்டியை ... Read More »

திருச்சி விமான நிலையத்தில் 543 கிராம் தங்கம் மீட்பு.

நேற்றிரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த டைகர் ஏர்வேஸ் விமானத்தில் வந்த பயணிகளை  சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த மூக்க கவுண்டர் மகன் செல்வம்(42) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர் கொண்டுவந்த பொருட்களை சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்த சிறுவர்கள் ஓட்டும் மோட்டார் சைக்கிளின் கைப்பிடிக்குள் 543 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்ததை ... Read More »

மாற்றான் மனைவிக்கு தாலி கட்ட முற்பட்ட பாஜாக தலைவர் சுப்ரமணியம் சாமி

திருநெல்வேலியில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு தலைமை தாங்கிய சுப்ரமணியம் சாமி மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லையில் திருமண விழா ஒன்றிற்கு தலைமை ஏற்க பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமியை அழைத்திருந்தார்கள். அப்போது தாலியை மணமகனிடம் கொடுக்க சொல்லி அவரிடம் கொடுத்த போது, அவர் மணப்பெண்ணிற்கு தாலி கட்டச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் நின்றிருந்த சந்திரலேகா உள்ளிட்டவர்கள் அதிர்ந்து போய் அவரைத் தடுத்து, அந்தத் தாலியை மணமகனிடம் கொடுக்கச் சொல்லியதை அடுத்து அவர் ... Read More »

கணவன் உட்பட அவரின் குடும்ப உறவினர்களை தீ வைத்துக் கொலை செய்த மனைவி.

மதுரையை அடுத்த சேடப்பட்டி, குமாரபுரத்தில் தனது கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். குமாரபுரத்தைச் சேர்ந்த கண்ணன் மனைவி பாண்டீஸ்வரி. கணவன் – மனைவிக்குள் அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், கண்ணன் தன்னுடன் வாழ வராததால் ஆத்திரமடைந்த மனைவி பாண்டீஸ்வரி, கண்ணன், தனது குடும்பத்துடன் நேற்று வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, அங்கு சென்றார். வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்தார். இதில், ஆழ்ந்த உறக்கத்தில் ... Read More »

கைதியுடன் திரைப்படம் பார்க்க சென்ற போலீஸாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ய பரிந்துரை.

விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருடன் திரைப்படம் பார்த்த விவகாரம் தொடர்பாக 3 பேர் திங்கள்கிழமை இரவு இடைநீக்கம் செய்யப்பட்டனர். புதுச்சேரி கன்னியாகோயில் பகுதியைச் சேர்ந்தவர் மதன்(22). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு விழுப்புரம் திரு.வி.க.வீதியில் மோட்டார் சைக்கிள் திருடியுள்ளார். அவரை அவ்வழியாக வந்த சிலர் பிடித்து விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது நகர போலீஸார் அவர் புதுச்சேரியாக இருப்பதால் அவரிடம் விசாரித்துவிட்டு புதுச்சேரியில் எதாவது திருட்டில் ஈடுபட்டுள்ளரா என்று பார்ப்பதற்காக அவரை சீருடை அணிந்த 4 போலீஸார் ... Read More »

திருவள்ளூர் அருகே செங்கல் சூளை குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

திருவள்ளூர் அருகே செங்கல் சூளை குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூரை அடுத்த அயத்தூர் கிராமத்தில், கொத்தியம்பாக்கத்தைச் சேர்ந்த பந்தா குட்டி என்பவர் செங்கல் சூளையை நடத்தி வருகிறார். இந்தச் சூளையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பாசார் கிராமத்தைச் சேர்ந்த மருதமலை, கண்ணன் உள்ளிட்டோர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மருதமலை மகன் அய்யனார் , கண்ணன் மகன் அய்யனார் ஆகியோர் பாசார் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்றனர். கோடை விடுமுறையையொட்டி, ... Read More »

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிறுநீரகப் பையை மாற்றி மருத்துவக் குழுவினர் சாதனை

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொழிலாளி ஒருவரின் புற்றுநோயால் பாதித்த சிறுநீரகப் பையை மாற்றி மருத்துவக் குழுவினர் சாதனை படைத்தனர். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் வடிவேல் முருகன் செய்தியாளர்களிடம் கூறும் போது, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சில நாள்களுக்கு முன்னர் சிறுநீரில் ரத்தம் வருவதாகக் கூறி ரவிச்சந்திரன் என்ற தொழிலாளி சிகிச்சைக்காக வந்தார். அவரைப் பரிசோதனை செய்தபோது அவரது சிறுநீர்ப் பையில் புற்றுநோய் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது சிறுநீர்ப்பை மற்றும் புராஸ்டேட் சுரபியை முற்றிலும் அகற்ற ... Read More »

ஆய்க்குடி கிராமத்தை வேறு தாலுகாவில் இணைப்பதை கண்டித்து கடையடைப்பு போராட்டம்

ஆய்க்குடி கிராமத்தை வேறு தாலுகாவில் இணைப்பதை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த ஆய்க்குடி பேரூராட்சி பகுதியை தென்காசி தாலுகாவில் இருந்து பிரித்து புதியதாக உருவாக்கபட்டுள்ள கடையநல்லூர் தாலுகாவில் இணைக்கபட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆய்க்குடி பகுதியை மீண்டும் தென்காசி தாலுகாவில் இணைக்க வலியுறுத்தியும் அனைத்து கட்சி மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஆய்க்குடியில் அனைத்து கடைகளும் அடைத்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். ... Read More »

குமரி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

குமரி மாவட்டத்தில்இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி பூதப்பாண்டி அருகே வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்தாலும் நாள் முழுவதும் மழை பெய்வதால் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக பூதப்பாண்டி, சுருளோடு, கோழிப்போர்விளை, மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மலைப்பகுதி, அணைப்பகுதிகளில் இடி–மின்னலுடன் கனமழை பெய்தது. பூதப்பாண்டி பகுதியில் இடி–மின்னலுடன் மழை பெய்தபோது ... Read More »

கைதியுடன் படம் பார்க்க சென்ற காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

விழுப்புரம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபருடன் திரைப்படம் பார்த்த விவகாரம் தொடர்பாக 3 பேர் திங்கள்கிழமை இரவு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  புதுச்சேரி கன்னியாகோயில் பகுதியைச் சேர்ந்தவர் மதன்(22). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு விழுப்புரம் திரு.வி.க.வீதியில் மோட்டார் சைக்கிள் திருடியுள்ளார். அவரை அவ்வழியாக வந்த சிலர் பிடித்து விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அப்போது நகர போலீஸார் அவர் புதுச்சேரியாக இருப்பதால் அவரிடம் விசாரித்துவிட்டு புதுச்சேரியில் எதாவது திருட்டில் ஈடுபட்டுள்ளரா என்று பாப்பதற்காக அவரை சீருடை அணிந்த 4 போலீஸார் ஜீப்பில் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com