Tuesday , 30 November 2021
Home » மாவட்டம்page 100

மாவட்டம்

துச்சேரியை போல காரைக்காலிலும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது -ஏ.வி.சுப்ரமணியன்

புதுச்சேரியை போல காரைக்காலிலும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் குற்றம்சாட்டினார். காரைக்காலில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது: புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்ட நிலையில், காரைக்காலிலும் அதே நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது. நிலம் அபகரிப்பு, வழிப்பறி, கொள்ளை, திருட்டு, சூதாட்டம் போன்ற சம்பவங்கள் காரைக்காலில் பெருகிவிட்டன. முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டும் அவர் காரைக்காலில் பணியாற்றுவதில்லை. ஒட்டுமொத்த காவல்துறையினரும் காவல்துறைப் பணியை வியாபாரமாக செய்கின்றனர். இதனால் மக்கள் அடையும் துன்பம் ஏராளம். இதற்கு முழு பொறுப்பும் முதல்வர் ... Read More »

விருதுநகர் அருகே விஷமருந்து அருந்தி இளைஞர் தற்கொலை.

விருதுநகர் அருகே விஷமருந்து அருந்திய இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வியாழக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார். விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முத்தானந்தம்(50). இவரது தம்பி ஈஸ்வரன்(31). இவர் மனநிலை சரியில்லாத நிலையில் அலைந்து கொண்டிருப்பாராம். அதனால் சகோதரர் வீட்டிற்கு அழைத்து வந்து பாதுகாத்து வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிகளுக்காக வைத்திருந்த விஷ மருந்தை எடுத்து அருந்தியுள்ளார். இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து சகோதரரிடம் தெரிவித்துள்ளனர்.  உடனே ஆபத்தான நிலையில் மீட்டு விருதுநகர் ... Read More »

உளுந்தூர் பேட்டை அருகே கார் விபத்து, இருவர் பலி

உளுந்தூர் பேட்டை அருகே காரின் டயர் வெடித்து, சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2  பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மடப்பட்டு என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காரின் டையர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் கார் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More »

வேதாரண்யம் அருகே மர்மக் காய்ச்சலால் பெண் பலி.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ராணுவ வீரரின் மனைவி திருச்சி மருத்துவமனை உயிரிழந்ததையடுத்து,சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நாலுவேதபதி கிராமம்,நடுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரணியன் ராணுவ வீரர்.இவரது மனைவி ஜெயலெட்சுமி(25)8 மாத கர்ப்பிணி.அண்மைக்காலமாக வேளாங்கண்ணியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் 26-ம் தேதி காய்ச்சலுடன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து,நாகை மற்றும் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். மே.30-ம் தேதி திருச்சியி்ல் உள்ள தனியார் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டு,அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பன்றிக்காய்ச்சலுக்கான ... Read More »

புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கோரிக்கை.

தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட வேண்டும் என்று அந்த கிராமத்தில் வசிக்கும் குடிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தருமபுரியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள புட்டிரெட்டிப்பட்டி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்படவில்லை. இதனால், அங்குள்ள கிராமவாசிகள், தங்கள் கிராமத்தில் உடனடியாக டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்று கோரி 5 பேர் கொண்ட குழு மனு ஒன்றையும் அளித்துள்ளது. அதற்காக அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், மதுபானம் வாங்குவதற்காக நாங்கள் பொம்மிடி அல்லது கடத்தூருக்கு சுமார் 7 கி.மீ. தூரம் ... Read More »

92 ஆவது பிறந்தநாள் விழா 92 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய கருணாநிதி.

திமுக தலைவர் கருணாநிதியின் 92 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி தூத்துக்குடியில் புதன்கிழமை 92 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.  திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 92 ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு புதன்கிழமை 92 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார். இதையெடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.  தொடர்ந்து, பகல் ... Read More »

முத்துகுமாரசாமி கொலை வழக்கு, அக்ரி கிருஷ்ண மூர்த்தி நிபந்தனை ஜாமீனில் விடுதலை.

முத்துகுமாரசாமி கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ண மூர்த்திக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை வேளாண்மைத்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றிய முத்துக்குமாரசாமி, கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். வேளாண் துறையில் தற்காலிக ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட 7 பேரிடம் தலா ரூ.1.75 லட்சம் வீதம் பணம் வசூலித்து தருமாறு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் வற்புறுத்தியதால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ... Read More »

மதுரையில் அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை.

மதுரையில் அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர் மர்மக்கும்பலால் புதன்கிழமை காலை வெட்டிக்கொல்லப்பட்டார். இதற்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீஸôர் சந்தேகிக்கின்றனர்.  மதுரை வெங்கடாசலபுரம் 3 வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). மதுரை மாநகர் 77 வது வட்ட அதிமுகச் செயலராக கடந்த 7 ஆண்டுகளாக இருந்துவருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி. 77 வது வட்ட மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர்களுக்கு 3 மகன்கள், மகள் உள்ளனர்.  ராஜேந்திரன் தினமும் காலையில் வெங்கடாசலபுரம் மார்க்கெட் பகுதியில் உள்ள டீக் கடைக்குச் செல்வது வழக்கம். ... Read More »

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்.

சென்னை ஐஐடி மாணவர்கள் அமைப்பான அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலலில் ஈடுபட்டுள்ளனர்.. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். Read More »

அற்புதாபுரத்தில் முறையாக குடிநீர், மின்சார விநியோகம் இன்றி அவதிப்படும் மக்கள்.

தஞ்சாவூர் அருகே அற்புதாபுரத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் குருங்குளம் ஊராட்சியில் உள்ள மேட்டுப்பட்டி சிலோன் காலனியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் குழாயில் பல மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் புதிதாக கட்டிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மின்இணைப்பு கொடுப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் ஊராட்சி ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com