Monday , 25 October 2021
Home » மாவட்டம்page 10

மாவட்டம்

வடகிழக்கு பருவமழை: திருவள்ளூரில் 51 பேரிடர் மீட்பு குழுவினர் தயார்

வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட 51 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், 42 மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழக முதன்மைச் செயலாளரும், கண்காணிப்புக்குழு தலைவருமான பிரபாகரன் தலைமையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் டி.பி.ராஜேஷ், குமரகுருபரன், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், சுகாதாரத்துறை அதிகாரிகள், ... Read More »

எது சிறந்தது – தமிழக சமையலா? வெளிநாட்டு சமையலா?

செங்கல்பட்டு அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரபல சமையல்கலை வல்லுனரான செஃப் தாமு, தமிழக கலாச்சாரப்படி மண்பாண்டங்களில் சமையல் செய்தும், வெளிநாட்டு சமையல் கலை நிபுணர் மேற்கத்திய சமையலையும் செய்து காட்டி அசத்தினார்கள். செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரில், உலக சமையல் கலை வல்லுனர்கள் தின விழாவையொட்டி இங்கு பயிலும் உணவக மேலாண்மைப்பிரிவு மானவர்களுக்கான பாரம்பரிய மற்றும் ஆரோக்கிய உணவு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதையொட்டி பாரம்பரிய நவதான்ய உணவு பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ... Read More »

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளைக்கு பயன்படுத்தியதாக சுற்றுலா வேன் பறிமுதல்

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாக சுற்றுலா வேன் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சமயபுரம் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 470 சவரன் தங்க நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனது. திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் நடத்திய இந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட கணேசன் என்பவரை நேற்று காவலில் எடுத்த தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவன் அளித்த தகவலின் பேரில் வங்கிக் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாக சுற்றுலா வேன் ... Read More »

காவிரி நீர் வரத்தால் சம்பா நடவு செய்யும் பணியை பாடலுடன் தொடங்கிய விவசாயிகள்

காவிரி ஆற்றில் நீர் வரத்தைக் கொண்டு சம்பா நெல் நாற்று நடவு பணியை பாடலுடன் தொடங்கினர் கரூர் மாவட்ட விவசாய தொழிலாளர்கள். நொய்யல் முதல் கடைக்கோடியான பெட்டவாய்த்தலை வரை சுமார் 85 கிலோமீட்டர் தூரம் இம்மாவட்டத்தில் காவிரி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. பாசன கால்வாய் மூலமாக பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நடவுக்குத் தேவையான நீர்வரத்தையடுத்து வீராக்கியம், கட்டளை,மாயனூர் உள்ளிட்ட 300 ஏக்கர் பரப்பில் சம்பா நெல் நடவு செய்யும் பணி தொடங்கியது. ஏற்கனவே அவுரி பயிரிட்டு டிராக்டர் மூலம் ... Read More »

200 கோழிகளும் வெடிகுண்டு மிரட்டலும்..! வில்லேஜ் விஞ்ஞானி கைது

200 கோழிகளுக்கு இரையாக ரேசன் அரிசி கொடுக்காத கடத்தல்காரரை போலீசில் சிக்க வைக்க, ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவசாயி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் சந்திப்பு ரெயில் நிலைய கோட்ட மேலாளர் சுப்பாராவுக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில் ரெயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து ரெயில் நிலையம் முழுவதும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து ... Read More »

மதுரையில் சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் கணவன் – மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது மனைவி சாருலதாவுடன் தங்களது மாருதி ஆம்னி வேனில் திருப்பரங்குன்றத்தில் உள்ள உறவினரைக் காணச் சென்றுகொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் கூத்தியார் குண்டு என்ற இடத்தின் அருகில் சென்றுகொண்டிருந்தபோது ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஆம்னி வேனை உடனடியாக நிறுத்திவிட்டு வெளியில் இறங்கிவிட்டதால் வெங்கடேசனும், சாருலதாவும் உயிர் தப்பினர். தகவல் அறிந்து தீயணைப்புத் ... Read More »

தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு – 5 வயது மகள் மர்ம மரணம்

கோவை ஒண்டிப்புதூர் அருகே வீட்டில் பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில், அவரது ஐந்து வயது மகளின் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஸ்ரீ காமாட்சி நகரை சேர்ந்த வேதவள்ளி என்பவர் கணவர் அமெரிக்காவில் வேலை பார்த்த போது இறந்து விட்ட நிலையில், ஐந்து வயது மகள் கார்குழலியுடன் தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் அவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு இரண்டு மணியளவில் அவர்கள் வீட்டில் தகறாறு ஏற்பட்டதாகவும், சற்று நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனக் கூறி ... Read More »

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு விவகாரம் -சிபிஐ.யிடம் திமுக மனு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகை விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி, திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ டாக்டர்.சரவணன், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தேர்தலின் போது, அதிமுக சார்பில் வழங்கப்பட்ட வேட்புமனுவின், பி வடிவத்தில், ஏ.கே.போஸ் வேட்பாளராக முன்மொழியப்பட்டு, அதில் ஜெயலலிதா கைரேகை இடப்பட்டிருந்தது. சுயநினைவு இல்லாமல் இருந்த ஜெயலலிதா எப்படி கைரேகை வைத்திருக்க முடியும் என்று திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் கைரேகை ... Read More »

காவிரி ஆற்றில் நடைபெற்ற துலா ஸ்நான நிகழ்ச்சி

திருச்சி திருப்பராய்த்துறையில் காவிரி ஆற்றில் நடைபெற்ற துலா ஸ்நானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு சமம் என்பதும் ஐப்பசி முதல் நாளில் திருப்பராய்த்துறையிலும், கடைசி நாளில் மயிலாடுதுறையிலும் நீராடி சிவதலங்களில் வழிபாடு செய்தால் நன்மை பெருகும் என்பதும் நம்பிக்கை. ஐப்பசி முதல் நாளான இன்று சூரியோதய நேரத்தில் திருச்சி திருப்பராய்த்துறை பசும்பொன் மயிலாம்பிகை சமேத தாருகாவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் உற்சவர் வீதியுலா நடைபெற்றது. காவிரிக்கரைக்கு உற்சவருடன் கொண்டுவரப்பட்ட ஆஸ்திரதேவரை ஆற்றுக்குள் கொண்டு சென்று தீர்த்தவாரி ... Read More »

கடன் பிரச்சினை- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ளது குயிலாப்பாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி என்பவரின் வீடு கடந்த மூன்று தினங்களாக பூட்டிக் கிடந்தது. வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதுபற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இன்று பூட்டை உடைத்து கதவை திறந்து பார்த்தபோது, வீட்டினுள் சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் என ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com