Friday , 24 September 2021
Home » மாவட்டம்

மாவட்டம்

தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து ஓ ராஜா மதுரை: தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆவின் விதிகளை மீறி ஓ.ராஜா ... Read More »

ராமநாதபுரம் அருகே நாசவேலையில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது…

ராமநாதபுரத்தில், பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாக கூறி, கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில், புஹாரியா பள்ளி மைதானம் அருகே, சிலர் கூடி, நாச வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசாரிடம் 3 பேர் சிக்கிய நிலையில் ஒருவர் தப்பியோடிவிட்டார். கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கீழக்கரை பகுதியை சேர்ந்த புறாக்கனி என்கிற பிச்சைக்கனி, கடலூர் மாவட்டம் கோண்டூர் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் ... Read More »

SSI கொலை வழக்கு – கேரளா அழைத்துச் சென்று பயங்கரவாதிகளிடம் விசாரணை

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகள் இருவரையும் கேரளா அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வரும் போலீசார், புதன்கிழமை நள்ளிரவு இருவரையும் கேரளா அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்ததாக சந்தேகப்படும் இடம், தவ்பீக்கின் உறவினர்கள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டுகள் விற்பனை ... Read More »

மழை காரணமாக பருத்தி விளைச்சல் அமோகம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பருத்தி விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பெருமாள்கோவில்பட்டி, அல்லிகுண்டம், கணவாய்ப்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக பருத்தி விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், 1 கிலோ பருத்தி 22 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறும் விவசாயிகள் போதிய விலை கிடைக்கவும், நேரடி ... Read More »

நீலகிரியில் பூத்துக் குலுங்கும் டைட்டோனியம் மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் பனி காலங்களில் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் டைடோனியம் மலர்கள் சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொள்வதாய் அமைந்துள்ளன. சூரியகாந்தி மலர்களை போல் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த வகை மலர்கள் குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் பகுதியில் மிக அதிகமாக உள்ளன. நெடுஞ்சாலையின் இருபுறமும் அதிக அளவில் மலர்கள் காட்சியளிப்பது நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மஞ்சள் தூவி வரவேற்பது போல் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது Read More »

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய தீட்சிதர் தலைமறைவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய விவகாரத்தில் தலைமறைவாகி உள்ள தீட்சிதரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்த லதா என்பவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தனது மகனின் பிறந்த நாளை கொண்டாட நடராஜர் கோவிலுக்கு அவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது கோயில் பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய தேங்காய் மற்றும் பழ தட்டை லதா கொடுத்துள்ளார். ஆனால் தீட்சிதர் வெறும் தேங்காயை உடைத்துவிட்டு ... Read More »

மீன் பிடித்து கொண்டிருந்த போது ஆற்றில் தத்தளித்த 7 பேர் பத்திரமாக மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென நீர்வரத்து அதிகமானதால் ஆற்றில் தத்தளித்த 7 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தாமிரபரணி ஆற்றின் முக்காணி அருகே உள்ள தடுப்பணை பகுதியில் முட்டு அளவில் இருந்த தண்ணீரில் இறங்கி சவேரியார்புரத்தை சேர்ந்த 7 பேர் தூண்டில் மூலம் மீன் பிடித்தனர். இந்நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் மாலை 6 மணியளவில் ஆற்றின் நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இதனால் 7 பேரும் ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் ... Read More »

சந்தன மரக் கடத்தலை தடுத்த விவசாயிக்கு வெட்டு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சந்தன மரக் கடத்தலை தடுத்த விவசாயியை வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர். உத்தனம்பாளையத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி, அரசு அனுமதியுடன் 100க்கும் மேற்பட்ட சந்தனமரங்களை வளர்த்து வருகிறார். நேற்றிரவு அவரது சந்தன மரங்களை சிலர் வெட்ட முயற்சித்தபோது அதை தடுத்த முத்துசாமியை வெட்டிவிட்டு ஓடி விட்டனர். காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் மர்ம நபர்களை மங்களபுரம் போலீஸார் தேடி வருகின்றனர். Read More »

பட்டிக்குள் புகுந்து ஆடுகளை அடித்துக் கொன்ற சிறுத்தை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பட்டிக்குள் இருந்த ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை உடனடியாக பிடிக்கும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பசுவபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான 5 வெள்ளாடுகள் வழக்கம்போல் வீட்டின் அருகே உள்ள பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணிக்கு ஆடுகள் கத்தும் சத்தம் கேட்கவே பட்டிக்கு சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர், அங்கு சிறுத்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின்னர் அவர்கள் கூச்சலிடவே, 2 ஆடுகள் இறந்த நிலையில், ஒரு ஆட்டை தூக்கிக்கொண்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ... Read More »

கோவை அருகே ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு…

கோவை மாவட்டம் சூலூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விடவே, அவர்கள் மீது ரயில் மோதியதில் துடிதுடித்து உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கவுதம் ஆகிய இரு இளைஞர்கள், சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் அரியர் தேர்வு எழுதுவதற்காக நேற்று அங்கு சென்றனர். அருகில் வாடகைக்கு அறை எடுத்து தங்கிய அவர்கள், தற்போது அதே கல்லூரியில் படிக்கும் கொடைக்கானலைச் சேர்ந்த சோதிக் ராஜா, தேனியைச் சேர்ந்த விஸ்வனேஷ் ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com