Thursday , 21 June 2018
Home » மாவட்டம்

மாவட்டம்

அரசு தடை செய்யப்பட்ட கடல் பசுவை பிடித்த மீனவர்கள் 3 பேர் கைது!!

kadal-pasu4

தொண்டியில் அரியவகை கடல்பசுவை பிடித்த மீனவர்கள்! விற்க முயற்சிக்கும்போது பிடிபட்டனர்! இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே எம்.ஆர்.பட்டிணம் கடல் பகுதியில் சுமார் 10 நாட்டிக்கல் தொலைவில் தொண்டி அருகே கடற்கரையோர கிராமமான நம்புதாளை கடற்கரை பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று இரவு கடலில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது அரிய வகை மீன் இனமாக கருதப்படும் கடல் பசு மீனவர்கள் வலையில் சிக்கியது.வலையில் சிக்கிய அரிய வகை கடல் பசு சுமார் 500 கிலோ எடை கொண்ட ஆண் கடல் பசுவாகும். அதிக ... Read More »

சேலத்தில் 20 லட்சம் ரூபாய்  குட்கா பொருட்கள் பறிமுதல்!!

gutka

சேலத்தில் வீடு மற்றும் குடோன்களின் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சேலம் அன்னதானப்பட்டி கே.எஸ் கார்டன் பகுதியில், ஏராளமான மாவு மில்கள், அரிசி குடோன்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றில் குட்கா பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டு சேலம் மாநகர் முழுக்க விநியோகம் செய்யப்படுவதாக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆணையர் உத்தரவின் பேரில், அன்னதானப்பட்டி காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 2 குடோன்கள் மற்றும் வீடு ஒன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 20 ... Read More »

சேலத்தில் அமைக்கப்படும் பசுமை சாலை பொதுமக்களுக்கு அவசியம் -அமைச்சர் கருப்பணன்

MINISTER KARUPPANNAN

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள வளையகாரபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சத்துணவு மையம் கட்ட பூமி பூஜையில் கலந்து கொண்ட தமிழகசுற்றுச் சூழல்துறை அமைச்சர் ;கருப்பணன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த பொழுது கூறுகையில் தமிழகத்தில் சுற்றுச்சூழுல் மாசு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.தமிழகத்திற்க்கு 8 வழிச்சாலை 100 சதவிகிதம் தேவை இதனால் நேரம் மிச்சம் படுத்தபடுகிறது. நிலமஉரிமையாளர்களுக்கு அந்த பகுதியில் உள்ள விலையை விட கூடுதலாக அரசு வழங்ககிறது இதன் காரணமாக இவர்கள்சாலை அமைக்க இடம்வழங்கிவிட்டு ... Read More »

ஸ்டெர்லைட் ஆலையில் 200 டன் கந்தக அமிலம் அகற்றம்!!

200 ton

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த பேரணியின் போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு கடந்த 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்’ வைத்தது. ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக புகார்கள் வந்ததால் மாவட்ட உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தனர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் சிறிய ... Read More »

ஸ்டெர்லைட் ஆலையில் 2 நாட்களில் கந்தக அமிலம் அகற்றப்படும் !!

MINISTER KARUPPANNAN

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் 2 நாட்களில் கந்தக அமிலம் அகற்றப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறினார்.ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கோனார்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் கல்வித்துறை சார்பில் புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் சீருடைகள் மாற்றப்பட்டு தனியார் ... Read More »

உணவுப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து!

fire

திருவள்ளூர் மாவட்டம் உத்தண்டிகண்டிகை கிராமத்தில் மன்னா என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெல்த் ப்ரொடக்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அரிசி, கோதுமை, மைதா உள்ளிட்ட மூலப் பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கான உணவு பொருட்கள், சத்து மாவு உள்ளிட்டவை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், தொழிற்சாலை கிடங்கில் இருந்து நள்ளிரவில் தீப்பிடித்ததைக் கண்ட காவலாளி, தொழிற்சாலை மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொழிற்சாலையில் உள்ள தீயணைப்பு கருவிகளைக் கொண்டு தீயை அணைக்க முயன்ற நிலையில், கிடங்கில் உள்ள அனைத்து பொருட்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. தகவலறிந்து ... Read More »

வால்பாறையில் மக்களை அச்சுறுத்திய சிறுத்தைப்புலி சிக்கியது!!

leopard

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு மாத காலமாக சிறுத்தைப்புலி மக்களை அச்சுறுத்தி தாக்கி 4 பேரை காயப்படுத்தியும் ஒருவரை கொன்றது.இதன் காரனமாக வால்பாறையில் நேற்று மாபெறும் மறியல் போராட்டம் நடைபெற்றது.இதனால் வால்பாறையில் போக்குவரத்து முடங்கியது கடைகள் அடைக்கப்பட்டன மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து வனத்துறையினர் மக்களை தாக்கிய சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சின்கோனா பகுதியில் சிறுமியை தாக்கிய குடியிருப்புக்கு அருகில் மற்றொரு இடத்தில் காஞ்சமலை என மூன்று இடத்தில் கூண்டு வைத்து கண்கானித்தனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்கானிக்க ... Read More »

அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

murder1-1

சென்னை காசிமேட்டில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினரரை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூர் அருகே காசிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.; இவர்; ராமேஸ்வரம் சென்று விட்டு நேற்று காலை காசிமேடு வந்த சிவகுமார் அருகில் உள்ள டீ கடையில் டீ குடித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்து ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் சிவகுமாரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காசிமேடு ... Read More »

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் கசிவு!

vedanta-770x433

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனக் கசிவு ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை அடுத்து உதவி ஆட்சியர் தலைமையிலான வல்லுநர் குழு ஆய்வு நடத்தி வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கசிவு தொடர்பாக ஆய்வு நடத்த உதவி ஆட்சியர் பிரசாத் தலைமையில் பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது ஸ்டெர்லைட் ஆலைக் கசிவு தொடர்பாக நேற்று மாலையில் ஆய்வு நடத்தியது. ஆய்வு நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ... Read More »

சென்னையில் இரவு நேர குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறையினருக்கு புதிய நடைமுறை!

OLYMPUS DIGITAL CAMERA

சென்னையில் இரவு நேர குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறையினருக்கு இரண்டு ஷிப்ட் பணி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னையில் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பைக்ரேஸ், வழிப்பறி, திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இரவு நேரங்களில் நடக்கும் இத்தகைய குற்றச்சம்பவங்களை தடுக்க, காவல்துறையினருக்கு இரண்டு ஷிப்ட் பணி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முதல் ஷிப்ட் பணியிலும், அதிகாலை 4 மணி முதல் காலை ... Read More »

Facebook Auto Publish Powered By : XYZScripts.com