Wednesday , 28 June 2017
Home » மாவட்டம் » தேனி » மாப்பிள்ளை விருந்து …அடிதான் மருந்து ; விநோதகோவிலில் நடக்கும் விளக்கமாற்று பூஜை !!

மாப்பிள்ளை விருந்து …அடிதான் மருந்து ; விநோதகோவிலில் நடக்கும் விளக்கமாற்று பூஜை !!

broomstick__largeஆண்டிபட்டி அருகே மறவபட்டியில் மாமன் -மைத்துனா்கள் ஒருவருக்கொருவா் விளக்குமாற்றால் அடித்துக்கொள்ளும் வினோத திருவிழா நேற்று நடந்தது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மறவபட்டி கிராமம். இங்கு 500க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் கிராமக் கோவில் திருவிழாவில் மாமன்- மைத்துனா்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவா் விளக்குமாற்றால் அடித்துக்கொள்ளும் திருவிழா நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘எங்கள் கிராமத்தில் முத்தாலம்மான் கோவில் திருவிழாவை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகிறோம். எங்கள் கிராமத் திருவிழாவின் சிறப்பே, எங்களுக்குள் மாமன் -மைத்துனா் உறவு முறை உள்ளவா்கள் சேத்தாண்டி வேடமிட்டு விளக்குமாற்றால் ஒருவருக்கொருவா் அடித்துகொள்வதுதான். இது பாரம்பரியமாகத் தொன்று தொட்டு நடந்து வரும் நிகழ்வு. இதன் மூலம் எங்களுக்குள் ஏதேனும் சண்டை சச்சரவோ, மனஸ்தாபமோ ஏற்படுவதில்லை அப்படியே சில நேரங்களில் ஏதேனும் சில சண்டை சச்சரவு ஏற்பட்டு இருந்தாலும் இந்த நிகழ்வின் மூலம் அனைத்தையும் மறந்துவிட்டு ஒன்றிணைந்து விடுவோம். இதில் எங்கள் கிராமத்து மாமன்- மைத்துனரை மட்டும் அடிப்போம். வெளியூர் நபர்களையோ உள்ளுா் பெண்களையோ அடிக்கமாட்டோம் என கூறினா்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com