Thursday , 25 May 2017
Home » முக்கிய செய்திகள்: » மாட்ரிட் ஓபன் டென்னிஸ் – ரபெல் நடால் ‘சாம்பியன்’

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் – ரபெல் நடால் ‘சாம்பியன்’

Nadal-trofeo-noticiaமாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 9-ம் நிலை வீரர் டோமினிச் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 7-6 (10-8), 6-4 என்ற நேர்செட்டில் டோமினிச் திம்மை சாய்த்து 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இந்த சீசனில் ரபெல் நடால் தொடர்ச்சியாக வென்ற 3-வது பட்டம் இதுவாகும். ஏற்கனவே மான்டிகார்லோ, பார்சிலோனா ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். 30 வயதான ரபெல் நடால் கைப்பற்றிய 30-வது ஏ.டி.பி.மாஸ்டர்ஸ் பட்டம் இதுவாகும். இதன் மூலம் அதிக மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்று இருந்த செர்பியா வீரர் ஜோகோவிச்சின் சாதனையை சமன் செய்தார். இந்த வெற்றியின் மூலம் ரபெல் நடால் உலக தர வரிசையில் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 4-வது இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் டோமினிச் திம் 2 இடங்கள் ஏற்றம் கண்டு 7-வது இடத்தை பெற்றார்.வெற்றிக்கு பிறகு ரபெல் நடால் அளித்த பேட்டியில், ‘தொடர்ச்சியாக 3 பட்டங்களை வெல்வது கடினமான காரியமாகும். முக்கியமான 3 போட்டிகளையும் வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் ரோம் பட்டத்தையும் வெல்ல முடியும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

 

Facebook Auto Publish Powered By : XYZScripts.com