Thursday , 20 September 2018
Home » தமிழ்நாடு » மல்லையா ஜெட்லி சந்திப்பு தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

மல்லையா ஜெட்லி சந்திப்பு தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

MK-Stalinமோசடி மன்னன் மல்லையா ஜெட்லி சந்திப்பு தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா, நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம், பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லையேல் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com