Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மலிங்காவின் அறிவுரையால் ஆட்டத்தில் ஜொலித்த பும்ரா !! | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » முக்கிய செய்திகள்: » மலிங்காவின் அறிவுரையால் ஆட்டத்தில் ஜொலித்த பும்ரா !!

மலிங்காவின் அறிவுரையால் ஆட்டத்தில் ஜொலித்த பும்ரா !!

dc-Cover-1lpmevgrttkabp9hugc7dbcqm2-20170430180527.Mediஇலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவருக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் இதுபற்றி பும்ரா கூறும்போது, ’பந்துவீச்சாளர்கள் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இதுதான் என் நோக்கம். இலங்கையில் இதற்கு முன் நான் விளையாடியதில்லை. இங்குள்ள சூழ்நிலை எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் பந்து வீசினேன். இது தொடர்பாக சீனியர்களிடம் ஆலோசனை கேட்பேன். அது எனக்கு உதவும். ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் இருக்கும் மலிங்கா, எனக்கு நிறைய ஆலோசனைகள் சொல்வார். கடந்த சில ஆண்டுகளாக அவரிடம் அதிகமாகக் கற்றுக்கொண்டேன். அது எனக்கு உதவியது. புதிய பந்து அல்லது பழைய பந்து எதுவாக இருந்தாலும் எனக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதை செய்வேன். அணியின் வெற்றிக்கு என் பங்களிப்பும் இருந்தால் அது உற்சாகம்தான்’ என்றார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com