Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மறைந்த முன்னாள் விளையாட்டு வீரரின் நினைவையொட்டி மாபெரும் கபடி போட்டி | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » காஞ்சிபுரம் » மறைந்த முன்னாள் விளையாட்டு வீரரின் நினைவையொட்டி மாபெரும் கபடி போட்டி

மறைந்த முன்னாள் விளையாட்டு வீரரின் நினைவையொட்டி மாபெரும் கபடி போட்டி

  1. vlcsnap-2018-07-24-10h27m16s156சென்னை ஆவடி அடுத்த பாலவேட்டில் மறைந்த முன்னாள் விளையாட்டு வீரரின் நினைவையொட்டி மாவட்ட அளவிலான இரண்டு நாள் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. பிரிஸ் டீ.ஜே. கலை நிகழ்ச்சி உரிமையாளர் அபிராஜ் மற்றும் ஆலை ப்ரெண்ட்ஸ் சார்பில் நடைபெற்ற இப்போட்டியை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.மேலும் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரத மாநில இளைஞர் அணி துணை பொது செயலாளர் லயன் பீரீஸ் பன்னீர் கலந்து கொண்டார். சென்னை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டன. நான்கு சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியானது காலிறுதி, அரையிறுதி என நடத்தப்பட்டு, சிறப்பாக விளையாடிய அணிகள் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. இதில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்த கார்த்திக் பிரதர்ஸ் ஆலத்தூர் அணிக்கு சிறப்பு அழைப்பாளர் லயன் பீரீஸ் பன்னீர் கோப்பை வழங்கியதோடு இளைஞர் அணி சார்பில் 25,000 காசோலை பரிசு வழங்கினார். இரண்டாம் இடத்தை பிடித்த அம்பேத்கர் பாலவேடு அணிக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தன் 20000 ரூபாய் பரிசு வழங்கினார். மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்த அன்பு மெமோரியல் பாலவேடு அணி மற்றும் தானே பிரண்ட்ஸ் அணிக்கு 15000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. இப்போட்டியை ஏற்பாடு செய்த ஆலை ப்ரெண்ட்ஸ் அணி கலைவாணர், அமுல், முரசொலி, டிஜே கார்த்திக் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com