Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மன்னார்குடி அருகே குழந்தை கடத்த வந்ததாக கூறி 7 பேர்மீது தாக்குதல்  | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Saturday , 24 September 2022
Home » மாவட்டம் » திருவாரூர் » மன்னார்குடி அருகே குழந்தை கடத்த வந்ததாக கூறி 7 பேர்மீது தாக்குதல் 

மன்னார்குடி அருகே குழந்தை கடத்த வந்ததாக கூறி 7 பேர்மீது தாக்குதல் 

vlcsnap-2018-07-05-10h45m51s497திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கமலாபுரம் என்ற இடத்தில் காரில் வந்த சிலர் சந்தேகம் படும் வகையில் சுற்றி திரிந்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்ததில் சந்தேகம் அளிக்கும் வகையில் பதிலளித்துள்ளனர்.
இதனையடுத்து குழந்தைகளை கடத்த வந்தவர்களாக இருக்கும் என சந்தேகமடைந்து அவர்களை தாக்கி வடபாதிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களால் தாக்கப்பட்ட திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி (24), பிரேம் (24), சத்யா (23) கார் ஒட்டுநர் ஐயப்பன் (42) புவனே~;வரன் (27)உள்ளிட்ட 7 பேரை கைது அவர்களிடமிருந்து இரண்டு கார்களை பறிமுதல் செய்து வடபாதிமங்கலம் காவல் நிலையத்திற்குஅழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் . இந்த விசாரணையில் தமிழக அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிய ஆடு மாடுகளுக்கு செட் போட வந்தவர்கள் என தெரிய வந்தது .
அதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து பேசி வருகின்றனர் . மத்திய அரசு வாட்அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு குழந்தை கடத்தல் கும்பல் என்ற சந்தேகத்தின்பேரில் அப்பாவிகளை அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள் சமீபகாலமாக நடந்து வருகிளன்றன இந்த நிலையில் மத்திய மன்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக வலைத்தலமான வாட்ஸ்அப் நிர்வாகத்திற்கு நேற்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்நிலையில் இதுபோன்று குழந்தை கடத்துபவர்கள் என்று தவறாக நினைத்து அடித்து கொல்லபட்ட சம்பவங்கள் வேதனைக்குறியவை . இதற்கு காரணம் பொருப்பற்றமுறையில் வாட்ஸ்அப் மூலம் வீடியோக்களும் செய்திகளும் வாந்திகளும் பரப்பபட்டதே ஆகும் இதை மத்திய அரசு கடுமையாக அனுகுகிறது . ஆத்திரமூட்டும் செய்திகளை வாட்ஸ்அப் மூலம் பரப்பி தவராக பயன்படுத்துவதை அதன் நிர்வாகம் அனுமதிக்ககூடாது என மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் கூறியிருந்தது இந்நிலையில் இதுமாதிரியான சம்பவம் இன்று திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசு திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய வருபவர்கள் அந்நந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்களை அனுகி அவர்களின் துணையுடன் வந்தால் இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும் .

Facebook Auto Publish Powered By : XYZScripts.com