Warning: Declaration of tie_mega_menu_walker::start_el(&$output, $item, $depth, $args) should be compatible with Walker_Nav_Menu::start_el(&$output, $item, $depth = 0, $args = Array, $id = 0) in /home/priwil/tamilantelevision.com/wp-content/themes/sahifa/functions/theme-functions.php on line 0
மன்னார்குடியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்ப சேவை சங்கங்கள் கோரிக்கை மனு. | Welcome to Tamilan Television - 24/7 Entertainment Television - Tamil News , District News and World News
Tuesday , 16 August 2022
Home » மாவட்டம் » திருவாரூர் » மன்னார்குடியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்ப சேவை சங்கங்கள் கோரிக்கை மனு.

மன்னார்குடியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரப்ப சேவை சங்கங்கள் கோரிக்கை மனு.

vlcsnap-2018-07-21-11h18m19s953திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் சேவை அமைப்புகள், வர்த்தக சங்கம், ஓய்வூதியர் சங்கம், மூத்த குடிமக்கள் சங்கங்களின் சார்பில் நகரத்தில் உள்ள நீர் நிலைகளுக்குத் தண்ணீர் நிரப்புவது தொடர்பாக மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை, அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர் . அவர்கள் அளித்த மனுவின் விபரம்.காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வருகின்ற நீரை பயன்படுத்தி நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பிக்கொள்ள தமிழக அரசும் அறிவுறுத்தி உள்ளது.
மன்னார்குடி நகரத்தின் நீர்நிலைகளுக்கு வடவாறு பாசனத்தின் மூலம் தண்ணீர் நிரப்பிக் கொள்ள அக்காலத்திலேயே வழிவகை செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக வடுவூர் பகுதியிலிருந்து 6 ம் நம்பர் வாய்க்கால் மூலமாக ஒவ்வொரு குளங்களும் ஒன்றன்பின் ஒன்றாக தண்ணீர் நிரம்பும் வகையில் பாசன கட்டமைப்பை நம் முன்னோர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளனர். அந்த நீர் வழிப் பாதைகளில் உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக ஆனைவிழுந்தான் குளம், ஹரித்ராநதி, ருக்மணிகுளம், தாமரைக் குளம், கோபிரளயகுளம், செங்குளம், கீழப்பாலம், பகுதியிலுள்ள அய்யனார்குளம் உட்பட 50க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை (மன்னார்குடி 93 நீர் நிலைகள் உள்ளதாக நகராட்சி மற்றும் வருவாய் துறை பதிவுகள் தெரிவிக்கின்றன ) நிரப்பிட வேண்டும். இது தவிர சிறு குட்டைகள் தொடங்கி நகரத்தில் காணப்படுகின்ற அனைத்து குளங்களையும் முழுமையாக நிரப்பிட வேண்டும்.கடந்த சில ஆண்டுகளில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பிலும் இந்தப் பணியை மேற்கொண்டாலும் .அப்போது நீர்வரத்து குறைவாக இருந்ததாலும். காலங்கடந்து பணியை தொடங்கியதாலும் குளங்களை நிரப்பும் பணி முழுமையாக செய்ய முடியவில்லை.இந்தாண்டு நீர் வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதால் நீர் நிரப்பும் பணியை விவசாயிகளின் சம்பா சாகுபடி பணி தொடங்குவதற்கு முன்னதாக பராமரிப்புப் பணிகளைச் செய்து, அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் நிரப்புவதை உறுதிப் படுத்த வேண்டும். என அம்மனுவில் கூறியுள்ளனர்.இந்த கோரிக்கை மனுவை பல்வேறு சேவை சங்கங்களின் நிர்வாகிகள் மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், அலுவலகத்திலும் நேரில் ஒப்படைத்தனர்

 

Facebook Auto Publish Powered By : XYZScripts.com