Tuesday , 19 March 2019
Home » இந்தியா » மத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்!

மத்தியப் பிரதேசம் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தீவிரம்!

2ராஜஸ்தான், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, ஆளுநர்களை சந்தித்து இன்று உரிமை கோர உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வந்த சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 90 இடங்களுக்கான தேர்தலில் 68 இடங்களை காங்கிரசும், 15 இடங்களை பா.ஜ.க.வும் வென்றுள்ளன. முதலமைச்சர் பதவிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பஹல் பெயரும், மற்றொரு மூத்த தலைவரான சிங்தேவ் பெயரும் பரிசீலனையில் உள்ளது. 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரசுக்கு 99 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 73 இடங்களும் கிடைத்துள்ளன. முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் முதலமைச்சர் சோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி; 115 இடங்களில் வென்றுள்ளதையடுத்து அக்கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. இந்நிலையில் ஆளுநரை சந்திக்க கோரி, காங்கிரஜ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்நாத் நேற்று இரவு கடிதம் எழுதியுள்ளார். அதிகாலை வரை வாக்குகள் எண்ணும் பணி நீடித்ததால், இன்றிரவு ஏழு மணிக்கு தம்மை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com